இவருக்கு தான் வாய்ப்பு கொடுக்க போவதில்லை ; பிறகு எதற்கு அணியில் எடுத்திங்க ? இவர் மட்டும் பேட்டிங் செய்திருந்தால் இந்திய அணிக்கு தோல்வியே இருந்திருக்காது ;

0

இந்திய அணிக்கு என்னதான் ஆச்சு ? கடுப்பில் இருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் … !!

ஒருவழியாக இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் 3 – 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி இந்திய அணியை வாஷ்அவுட் செய்து சாதனை படைத்துள்ளது. முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் மூன்றாவது போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது தென்னாபிரிக்கா அணி.

இந்த முறை இந்திய அணிக்கு கேப்டன் பற்றிய பிரச்சனை தொடர்ந்து எழுந்து கொண்டே தான் போகிறது. அதிலும் விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரை தொடர்ந்து ரோஹித் சர்மா தான் தலைமை தாங்கி வருகிறார். ஆனால் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான போட்டியின் பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவுக்கு கையில் அடிப்பட்டுவிட்டது.

அதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமனம் செய்தது பிசிசிஐ. ஆனால் அவரால் அதனை சரியாக செய்யமுடியுமா ?? என்பதை பற்றி யோசிக்கவே இல்லை. ஆமாம்… ! தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான போட்டியில் கே.எல்.ராகுல் மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தினார்.

ஆனால் அதிலும் அனைத்திலும் தோல்வி தான் இந்திய அணிக்கு, இதே விராட்கோலி அல்லது மற்ற வீரர்கள் கேப்டனாக இருந்திருந்தால் நிச்சியமாக ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம்.. இவரை ஏன் அணியில் எடுக்கவில்லை ? என்ற கேள்வி தான் அதிக அளவில் எழுந்து வருகிறது.

ஆமாம்…!! அணியில் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெற்றார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் மிகவும் சிறப்பாக போட்டியாக ருதுராஜ்-க்கு அமைந்தது. ஆமாம்..! அதிக ரன்களை அடித்துள்ளார். பின்னர் இந்திய நாட்டில் நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பையில் அதிக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் ருதுராஜ்.

பல சாதனைகளை செய்தும், அதிக ரன்களை அடித்த காரணத்தால் தான் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான போட்டிகளில் இடம்பெற்றார். ஆனால் அது பிரியோஜனம் இல்லாமல் போய்விட்டது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் விளையாடிய இந்திய அணி தோல்வியை மட்டுமே தான் சந்தித்தது. அதில் ஒரு போட்டியில் ஆவது ருதுராஜ் கெய்க்வாட் -க்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

கே.எல்.ராகுலக்கு பதிலாக இந்திய அணியை பும்ரா கேப்டனாக நியமனம் செய்துவிட்டு தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிருந்தால் சிறப்பாக ஆட்டமாக அமைந்திருக்கும். அதுமட்டுமின்றி இதுவரை பல முறை ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார் கே.எல்.ராகுல் ஆனால் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றியது இல்லை.

கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க…! இந்திய அணியின் மோசமான தோல்விக்கு யார் காரணமாக இருக்கும்? உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here