விராட் இல்லை ; இந்திய அணியின் கேப்டன் இவர் தான் ; போட்டிகள் நிச்சியமாக Mass – ஆ இருக்கும்..! அதில் எந்த சந்தேகமும் இல்லை ; ஆகாஷ் சோப்ரா கருத்து..!

கடந்த மாதம் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்த ஐபிஎல் 2021, ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஐபிஎல் அணியில் சில வீரருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதுமட்டுமின்றி சில வீரருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக ஐபிஎல் 2021 போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ.

60 போட்டிகளில் 29 போட்டிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்து அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இதற்கிடையே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் சீரியஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்திய வீரர்கள் மிகவும் பிஸி ஆக இருக்கின்றனர். தீடிரென்று பிசிசிஐ, இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் நடக்கப்போவதாக தங்கள் வெளியானது.

இந்த போட்டிகள் ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்படியென்றால் எந்த அணி இலங்கையை எதிர்கொள்ள போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய B அணி இதனை விளையாடும்.

அதில் தவான், ப்ரித்வி ஷாவ், ஹார்டிக் பாண்டிய, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான்,குர்னல் பாண்டிய, சஹால், தீபக் சாகர், புவனேஸ்வர் குமார், சைனி, நடராஜன், ராகுல் சாகர், வருண் சக்ரவத்தி, சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, பிரஷித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போட்டிகளை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, இவர் இலங்கைக்கு எதிரான போட்டியை வழிநடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் வெற்றி பெற அதிகம் வாய்ப்பு உள்ளதாக அவரது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தவான் அவரை உயர்த்தி வருகிறார். சில போட்டிகளை அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார், அதுமட்டுமின்றி ஐபிஎல் 2021 போட்டிகளில் விளையாடிய 380 ரன்களை விளாசியுள்ளார். அதில் அதிகபட்சமாக 92 ரன்களை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் தவான் கேப்டன் ஆக இருந்தால் சிறப்பான ஆட்டத்தை அவர் நிச்சியமாக வெளிப்படுத்துவார். அதனால் இந்திய அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று அவரது கருத்தை கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.