இந்திய அணியில் இதனை அருமையான வீரர்கள் இருப்பதற்கு இவர் ஒருத்தர் தான் காரணம் ; முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் வீரர் அதிரடி பேட்டி..!

இந்திய அணியில் இதனை அருமையான வீரர்கள் இருப்பதற்கு இவர் ஒருத்தர் தான் காரணம் ; முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் வீரர் அதிரடி பேட்டி..!

ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது வழக்கம். ஆனால் அதனை தேர்வு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவேளை தவறாக ஒருவரை தேர்வு செய்துவிட்டால், பின்பு நிச்சியமாக அணியின் தோல்விக்கு கூட வலி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அணியின் வீரர்களை தேர்வு செய்வது பற்றி பேசியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் வீரரான Gerg Chappell சில கருத்துக்களை கூறியுள்ளார். சரியான இளம் வீரர்களை தேர்வு செய்வதில் ஆஸ்திரேலியா அணி பெஸ்ட் இல்லை அதனை நான் ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியில் சரியான இளம் வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர். மிகப்பெரிய நாடான இந்தியாவில் சரியான திறமையான வீரர்களை இந்திய அணியில் தேர்வு செய்து வருகிறார் ராகுல் டிராவிட்.

எனக்கு நன்கு தெரியும், ஆஸ்திரேலியா அணியில் புதிய இளம் வீரர்களை தேர்வு செய்வதில் நாங்கள் தோற்றுவிட்டோம், ஆனால் இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் அதனை சிறப்பாக செய்து வருவதாக முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் வீரரான Greg Chappell கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் ஏ பிரிவுக்கு சரியான பயிற்சியாளர் தான் ராகுல் டிராவிட். இந்திய அணியின் ஏ பிரிவில் இருந்து சுமன் கில், அபிமன்யு ஈஸ்வரன், விஹாரி, ருதுராஜ் கெய்க்வாட், மனிஷ் பாண்டே, சிவம் துபே, விஜய் ஷங்கர், அக்சர் பட்டேல், குர்னல் பாண்டிய, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து வருவதில் ராகுல் டிராவிட் சிறப்பான பயிற்சியாளர் என்று சமூகவலைத்தளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். இதுவரை ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,889 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.