பும்ரா இல்லை ; ஐபிஎல் 2021 போட்டியில் மிரளவைத்த பவுலர் இவர் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை : ஆகாஷ் சோப்ரா

ஐபிஎல் 2021; கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டி சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக சில வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், ஐபிஎல் 2021 தொடரை நிறுத்த வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

கொரோனா தோற்று ஏற்பட்ட வீரர்கள் ;

கடந்த மே4 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய போட்டிக்கு முன்பு சில கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சில வீரர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் காரோண தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அந்த போட்டியை மட்டும் முதலில் ரத்து செய்தது பிசிசிஐ. சில சந்தேகத்தின் அடிப்படையில் அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஒருவருக்கும், சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியில் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக ஐபிஎல் 2021 போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ.

மீதமுள்ள போட்டிகள் நடைபெறுமா ?

சமீபத்தில் கங்குலி அளித்த பேட்டியில் மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகள் நடக்க கண்டிப்பாக சில காலதாமதம் ஆகும். அதுவும் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.

பவுலரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா;

ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் ; இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நடச்சத்திர வீரர் சேட்டன் சக்கரியா, அவரது பவுலிங் திறன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் 2021 ஏலத்தில் 1.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

அதுமட்டுமின்றி, இவர் விளையாடிய போட்டிகளில் முக்கியமான பேட்ஸ்மேன் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதில் கே.எல்.ராகுல் , எம்.எஸ்.தோனி போன்ற விக்கட்டை கைப்பற்றியுள்ளார் சேட்டன் சக்கரியா என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஐபிஎல் 2021 போட்டியில், இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய 7விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் சேட்டன் சக்கரியா.