ரவி சாஸ்திரிக்கு பிறகு இப்படி பட்ட ஒரு பயிற்சியாளரா இந்திய அணிக்கு..!! ; சந்தோஷத்தில் மூழ்கிய ரசிகர்கள் ;

0

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இதுவரை 33 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்னும் சில போட்டிகள் மட்டுமே உள்ளது இறுதி போட்டிக்கு…! ஆரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

ஆனால் இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா ?/ இல்லையா ?/ என்பது தான் கேள்வி குறியே. ஏனென்றால் குரூப் B யில் இருந்து இரு அணிகள் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெரும். அதில் பாகிஸ்தான் அணி உறுதியாகிவிட்டது.

இன்னும் மீதமுள்ள நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய அணி…! இந்த உலகக்கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் நடைபெற உள்ளது.

அதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி ஓய்வு பெற போகிறார் ?? அதனால் அடுத்த பயிற்சியாளர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. பின்னர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட்கோலி , டி-20 போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலக போகிறார் என்று அவரே சொல்லிருந்தார்…!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக யார் வரப்போகிறார் என்று பல யோசனைகள் எழுந்தன. ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்த மாதிரி தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் டெஸ்ட் கிங் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் தான் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் நிச்சயமாக இந்திய அணி அடுத்த லெவல் போகும் என்று எதிர்பார்க்க படுகிறது…! அதுமட்டுமின்றி, பல இளம் வீரர்களையுடன் இருந்து அவர்களை வழிநடத்தி அனுபவம் அதிகமாகவே உள்ளது. under 19 உலகக்கோப்பை அணியை சிறப்பாக நடத்தி உள்ளார்.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி…! அதனால் நிச்சியமாக ராகுல் டிராவிட் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது…!

ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இடம்பெற்றது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here