நாங்களே நினைத்தாலும், இவரை டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் இருந்து வெளியேற்ற முடியாது ; தேர்வு குழு உறுதி ;

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி-20 தொடருக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் 3 – 0 என்ற நிலையில் வாஷ்-அவுட் செய்தது இந்திய அணி. இப்பொழுது டி-20 போட்டியிலும் 1 – 0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது இந்திய.

அதுமட்டுமின்றி இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான ஆலோசனையில் உள்ளது. அதுமட்டுமின்றி, இந்தமுறை எப்படியாவது ஐசிசி உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டுமென்று பிசிசிஐ பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.

அதனால் தான் இனிவரும் போட்டிகளில் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க போகும் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. டி-20 ஐசிசி உலகக்கோப்பை போட்டி கடந்த 2007ஆம் ஆண்டு தான் அறிமுகம் ஆனது. அப்பொழுது தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது.

அதன்பிறகு கோப்பையை வெல்ல முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது இந்திய. அதிலும் கடந்த ஆண்டு மிகவும் மோசமான நிலை என்பதில் சந்தேகமில்லை. அதனால் இந்த முறை சரியான வீரர்களை தேர்வு செய்து சிறப்பாக விளையாட உள்ளது இந்திய. உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

ஆமாம், இதனை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு கூறுகையில் ” இந்திய அணியில் முக்கியமான வீரராக உள்ளார் தினேஷ் கார்த்திக். அதனால் அவரை நிச்சியமாக அணிய இருந்து வெளியேற்ற முடியாது. இப்பொழுது அவரது அதிரடியான ஆட்டத்தை யாராலும் நிறுத்தவே முடியாது.”

“அவரது அதிரடியான ஆட்டத்தால் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறார். தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் தேவையான ஒன்று. நாங்கள் தினேஷ் கார்த்திக் பற்றி பெரிய அளவில் எந்த விதமான கருத்துக்களை கூறவில்லை என்றாலும், அவரது ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் வருகிறோம்.”

“வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டி சவாலாக தான் இருந்தது. இருப்பினும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறார் தினேஷ் கார்த்திக். அதேபோல அவருக்கு (தினேஷ் கார்த்திக்) கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிடின் ஆதரவு முக்கியமான ஒன்றாக உள்ளது என்று கூறியுள்ளனர்.”

37 வயதான தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி ரன்களை குவித்தார். அதனால் மீண்டும் இந்திய அணியில் வருகையை பெற்றார் தினேஷ் கார்த்திக். அதிலும் இந்திய அணியின் அசைக்க முடியாத பினிஷராகவும் விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 19 பந்தில் 41 ரன்களை விளாசியுள்ளார் தினேஷ் கார்த்திக். அதனால் நிச்சியமாக உலகக்கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here