விராட் இல்லை ; இவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம், அதில் எந்த சந்தேகமும் இல்லை ; முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை எதிர்கொள்ள போகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனென்றால் ஒருவேளை இந்திய அணி வெற்றி பெற்றால் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பையை கைப்பற்ற முடியும்.

இந்திய அணி வெற்றி பெறுமா ? இல்லையா ? என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும். அதற்கிடையே அவ்வப்போது இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களை பற்றி சில கருத்துக்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது வழக்கம்.

அதே போல, 23 வயதான இந்திய அணியின் இளம் வீரரான ரிஷாப் பண்ட் பற்றி சில முக்கியமான தகவலை இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ரிஷாப் பண்ட் பற்றி கூறிய சுனில் கவாஸ்கர்; இந்திய அணியின் எதிர்காலமே அவர் தான்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடிபட்டதால் அவரால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வழிநடத்த முடியாமல் போய்விட்டது. அதனால் ரிஷாப் பண்ட் கேப்டனாக இருந்தார். ஐபிஎல் 2021யில், டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புல்லிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி இந்திய அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை மட்டுமே விளையாடி வருகிறார் ரிஷாப் பண்ட். இந்த ஆண்டு 2021 தொடக்கத்தில ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை விளையாடியுள்ளார் ரிஷாப் பண்ட், சில தவறுகள் அவர் செய்கிறார், எந்த கேப்டன் தான் தப்பு செய்யவில்லை.

அவரது சிறப்பான பேட்டிங் , விக்கெட் கீப்பர் மட்டுமின்றி கேப்டன் ஆக விளையாடி வருகிறார் ரிஷாப் பண்ட். அதனால் நிச்சியமாக இவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் என்பதில் சந்தேகமில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.