இந்திய அணியில் இவர் ஒருத்தர் போதும்; பேட்டிங் மற்றும் பவுலிங்-ல் பட்டைய கிளப்புவார் ; கிளென் மெக்ரா உறுதி ;

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிகளை கொண்டு தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர். இன்னும் மீதமுள்ள இரு போட்டிகளில் ஒரு போட்டியி இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு இருக்கும்.

இந்திய அணியின் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு மட்டுமின்றி, ஜிம்பாபே, ஆசிய கோப்பை, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022 போட்டியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆல் – ரவுண்டரின் முக்கியத்துவம் ;

இந்திய அணியின் முக்கியமான வீரராக களமிறங்கி விளையாடி வந்தவர் ஹர்டிக் பாண்டிய. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இவரால் சரியாக பேட்டிங் மட்டும் பவுலிங் செய்ய முடியாமல் போனது.

அதனால் ஹர்டிக் பாண்டிய கம்பேக் கொடுப்பாரா இல்லையா ? என்று பல கேள்விகள் எழுந்தன. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஹர்டிக் பாண்டிய இடம்பெற்றது பலருக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் ஹர்டிக் பாண்டியவின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை.

அதன்பிறகு நான் பவுலிங் சரியாக வீசும் வரை என்னை எந்த போட்டியிலும் எடுக்க வேண்டாம் என்று கூறினார். கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கி பேட்டிங் மற்றும் பவுலிங் போன்ற விஷயங்களில் சிறப்பாக செய்தார்.

அதனால் மீண்டும் கம்பேக் கொடுத்தார் ஆல் – ரவுண்டரான ஹர்டிக் பாண்டிய. இவரது வருகை இந்திய அணிக்கு நிச்சியமாக பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு டி-20 உலககோப்பையோ போட்டியில் ஹர்டிக் பந்தியாவின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை பற்றி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான கிளென் மெக்ரா கூறுகையில் ; ” ஹர்டிக் பாண்டிய எப்பொழுது அவரது பவுலிங் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்க கூடாது. ஏனென்றால் அது தான் அவருக்கு முக்கியமான ஒன்று. அவர் காயங்களில் இருந்து மீண்ட உடன் பவுலிங் செய்ய ஆர்வகமாக இருந்தார்.”

“அந்த நம்பிக்கை தான் அவருக்கு பயத்தை ஏற்படுத்தாமல் போனது. எப்பொழுது விரைவாக பவுலிங் செய்யும்போது யாராக இருந்தாலும் நம்பிக்கை நிச்சியமாக ஏற்படும். ஹர்டிக் பாண்டியாவால் பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பாக செய்ய முடியும். இரு வீரர்கள் செய்யும் வேலையை ஒருவரே செய்வார்.”

“அதனால் அவருடைய இந்த விளையாட்டு மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார் க்ளென் மெக்ரா.” இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் நிச்சியமாக ஹர்டிக் பாண்டிய இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here