இந்திய அணியின் ஆட்டத்தையே மாற்றியமைக்கும் திறன் இவருக்கு உள்ளது..! இவரை பார்த்தால் அனைவரும் பயப்பட்டு கொண்டு இருக்கின்றனர் ; தினேஷ் கார்த்திக்..!

இந்தியன் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் அளித்தே பேட்டியில் , ஒரு இந்திய அணியின் வீரரை பற்றி இவர் மிகவும் ஆபத்தான வீரர், இந்திய அணி வெற்றிக்கு இவரது பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார்.

இப்பொழுது இருக்கும் இந்திய அணியில் மிகவும் முக்கியமான வீரராக ரிஷாப் பண்ட் -யின் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ரிஷாப் பண்ட் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளுக்கு பிறகு அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது என்பதில் சந்தேமில்லை.

ஐபிஎல் டி – 20 2021 லீக் போட்டிகள் சிறப்பான முரையில் கடந்த மதம் ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்தது. ஆனால் எதிர்ப்பாராத விதமாக ஐபிஎல் டி-20 போட்டிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்தது. அதிலும் 8 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது ஸ்ரேயாஸ் ஐயர் தோள்பட்டையில் பலமாக அடிபட்டுவிட்டது. அதனால் வேறு வழியில்லாமல் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அவர் குறைந்தது 5 மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.

அதனால் அவரால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் போய்விட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணியை ரிஷாப் பண்ட் வழிநடத்த ஆர்மபித்தார். அதுவும் சிறப்பான முறையில் வழிநடத்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை முதல் இடத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

ரிஷாப் பண்ட் -க்கு எப்பொழுதும் அவர் மீது அவருக்கு அதிக நம்பிக்கை இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல தான் அவர் ஐபிஎல் 2021 மற்றும் இந்திய அணியின்”ஏ” பிரிவில் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்.

இப்பொழுது நீங்களே பார்க்கலாம் அனைத்து நாட்டு கிரிக்கெட் அணியும் ரிஷாப் பண்ட் செய்யும் பேட்டிங் பற்றி பாய்ந்து உள்ளனர். அதுவே உண்மை.சஹா ஒரு மிகப்பெரிய விக்கெட் கீப்பர் தான். ஆனால் ரிஷாப் பண்ட் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்-யின் அதிக திறனால் இப்பொழுது சஹா இந்திய அணிக்கு வெளியேற உள்ளார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

ஜூன் 18ஆம் தேதி இந்தியா மற்றும் நியூஸிலாந்து நாட்டுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. அதனால் ரிஷாப் பண்ட் , விராட்கோலி போன்ற வீரர்கள் இப்பொழுது சவுத்அம்ப்டன் மைதானத்தில் அவரவர் அறையில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.