இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நாயகன் இவர் மட்டுமே ; பா..! அருமையாக பேட்டிங் செய்கிறார் ;

0

டாஸ்:

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டி பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியுள்ளனர்.

அதனால் டி-20 போட்டியில் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

இந்திய அணியின் பேட்டிங் :

முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரிய அளவில் தொடக்க ஆட்டம் அமையவில்லை. ஏனென்றால், தொடக்க வீரரான ரோஹித் ஷர்மாவுடன் கைகோர்த்து விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ். ஆனால் இந்த முறை தொடக்க வீரராக அறிமுகம் செய்தது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியாக தான் இருந்தது.

இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 190 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 64, சூரியகுமார் யாதவ் 24, தினேஷ் கார்த்திக் 41 ரன்களை அடித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் :

191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதுவரை விளையாடி 6 ஒவரில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 42 ரன்களை அடித்துள்ளனர். இதில் தொடக்க வீரர்களான மாயேர்ஸ், ப்ரூக்ஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆட்டம் இழந்துள்ளனர்.

தினேஷ் கார்த்திக் கம்பேக்:

தினேஷ் கார்த்திக் கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆகி சிறப்பாக விளையாடினார். ஆனால் அவருக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத நிலையில் அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்புகள் குறைந்தன. அதனால் அதிகபட்சமாக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வந்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2022ல் விளையாடிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி பெங்களூர் அணியின் முக்கியமான பினிஷராக வளம் வந்தார். அதனால் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். இன்றைய முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 15 ஓவருக்கு மேல் மோசமான நிலையில் ரன்களை அடிக்க கடினமாக இருந்தது. ஆனால். தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை விளாசினார்.

ஆமாம்..! இறுதி ஓவர் வரை ஆட்டம் இழக்காமல் அதிரடியாக விளையாடி 19 பந்தில் 41 ரன்களை விளாசியுள்ளார். அதனால் தான் இந்திய அணி 190 ரன்களை அடிக்க முடிந்தது. அதனால் இதேபோன்ற விளையாட்டு இனிவரும் போட்டிகளில் இருந்தால் நிச்சியமாக இந்த உலகக்கோப்பை டி-20 2022 போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் பெயர் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here