Advertisement
HomeTrending Newsஐபிஎல் 2022யில் இவர் ப்ளேயராக தான் விளையாடுவார் ; ஆனால் கேப்டனாக இருக்க வாய்ப்பே இல்லை...

ஐபிஎல் 2022யில் இவர் ப்ளேயராக தான் விளையாடுவார் ; ஆனால் கேப்டனாக இருக்க வாய்ப்பே இல்லை ; முன்னாள் வீரர் உறுதி ;

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு லக்னோ மற்றும் அஹமதாபாத் ஆகிய இரு அணிகளும் அறிமுகம் செய்துள்ளதால். அதனால் இந்த முறை மெகா ஏலம் நடத்த போவதாகவும் பிசிசிஐ கூறியது.

அதில் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் வார்னருக்கு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. ஆமாம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் தான் தொடங்கியது ஐபிஎல் போட்டியில். அதில் 8 போட்டிகளில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி வெறும் 1 போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றது.

ஆஸ்திரேலியா அணியின் வீரர் டேவிட் வார்னர் தான் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் கேப்டனாக இருந்தார். பின்னர் சன்ரைசர்ஸ் அணி மோசமான நிலையில் இருந்த காரணத்தால், டேவிட் வார்னரை கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றி கெவின் வில்லியம்சன் கேப்டனாக நியமனம் ஆனார்.

பின்னர், டேவிட் வார்னருக்கு வாய்ப்பு கிடைக்காமல் அணிய, இருந்து வெளியேற்றினார்கள். பின்னர் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை டி-20 போட்டிகளில் வார்னர் ரன்களை விளாசி தொம்சம் செய்தார். அதனால் நிச்சியமாக இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அளித்த பேட்டியில் ; எனக்கு தெரிந்து நிச்சியமாக கேப்டனாக வார்னர் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் நிச்சியமாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். வார்னரை பஞ்சாப் அணி கைப்பற்றுமா இல்லையா என்பது எனக்கு தெரியாது.

ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான். இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் நிச்சியமாக அதிக விலைக்கு போவார். ஐபிஎல் போட்டி என்பது குறுகிய காலம், அதுவும் கேப்டனாக வார்னர் செய்த செயல் அனைவருக்கும் தெரியும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வார்னர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

ஒருவேளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வார்னர் இடம்பெற்றால், விராட்கோலி மற்றும் வார்னரின் ஆட்டம் எரிமலை போல அதிரடியாக இருக்கும் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா….!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular