ஹார்டிக் இல்லை ; இந்தியாவுக்கு அடுத்த ஆல் -ரவுண்டர் நாங்க ரெடி பண்ணிட்டோம் ; இந்திய அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்

வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்திய மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு அணிகள் மோத உள்ளன. இந்த இறுதி போட்டி இங்கிலாந்து உள்ள சவுத்ஆம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பையை கைப்பற்ற முடியும். இந்திய அணி வெற்றி பெறுமா இல்லையா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

இந்திய அணிகளின் விவரம் ;

சமீபத்தில் பிசிசிஐ, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் கேப்டன் (விராட் கோலி), துணை கேப்டன் (ரஹானே), ரோஹித் சர்மா, சுமன் கில், மயங்க அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷாப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகம்மது ஷாமி, முகம்மது சிராஜ், தாகூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் , சஹா போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் வீரர்கள் பட்டியலில் ஆல் -ரவுண்டரான ஹார்டிக் பாண்டிய இடம்பெறவில்லை. அதற்கு காரணம் கடந்த சில போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை என்பது தான். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண்.

உலக டெஸ்ட் சாம்பியன் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹார்டிக் பாண்டிய இடம்பெறவில்லை. ஆனால் இப்பொழுது எல்லாம் தாகூர் ஆல் -ரவுண்டர் ஆக சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். ஏனென்றால் இந்த ஆண்டு தோட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் தாகூர்.

அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி 7 விக்கெட்டை கைப்பற்றி 50க்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார் தாகூர். இப்பொழுது இருக்கும் இந்திய வீரர்களில் இவருக்கு அதிக விதமாக திறன் உள்ளது.

இந்திய ஆல் -ரவுண்டர் ஆக இருக்கு அவருக்கு தகுதி உள்ளது. கண்டிப்பாக வருகின்ற இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அவர் அதனை சரியாக பயன்படுவார் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் பாரத் அருண்.