CSK-வில் ரெய்னாவுக்கு பதிலாக இவர் தான் அந்த இடத்திற்கு சரியாக இருப்பார் ; முன்னாள் தென்னாபிரிக்கா வீரர்…! கருத்து ..!

ஐபிஎல் 2021 யின் இரண்டாம் பாகம் இப்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 49 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் 11 போட்டிகள் மட்டுமே உள்ளது. அதன்பிறகு ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெறும்.

இதுவரை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் உறுதியானது. ஆனால் இன்னும் ஒரு அணி மட்டும் முடிவு செய்யாமல் உள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு போல இல்லாமல் சிஎஸ்கே அணி மாஸ் கம்பேக் கொடுத்து ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமை கொண்டுள்ளது.

சிஎஸ்கே அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 9 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் பேட்டிங் மிடில் ஆர்டரில் சரியாக யாரும் விளையாடுவது இல்லை. அதிலும் குறிப்பாக சுரேஷ் ரெய்னா. 34வயதான சுரேஷ் ரெய்னா ஐக்கிய அரபு நாட்டில் விளையாடிய போட்டிகளில் 4, 17*, 11, 2 மற்றும் 3 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

இதனை பற்றி பேசிய முன்னாள் தென்னாபிரிக்க வீரர் ஷான் போலாக் ; சுரேஷ் ரெய்னா மீண்டும் அவரது பார்ம் -க்கு வர மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார். ஒருவேளை சுரேஷ் ரெய்னா மீண்டும் 3வது இடத்தில் பேட்டிங் செய்தால் அவரால் நல்ல ரன்களை எடுக்க முடியலாம். அப்படி இல்லையென்றால் சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக ராபின் உத்தப்ப இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும்.

சிஎஸ்கே அணி எப்பையுமே அதிக அளவில் வீரர்களை மாற்றம் செய்ய மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து வெற்றியை கைப்பற்றி கொண்டு வருவதால் அணியில் உள்ள ஆட்களை மாற்றுவது சிரமம் தான் என்று கூறியுள்ளார் போலாக். ஒருவேளை இவர் சொல்லுவது போல சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக ராபின் உத்தப்ப சரியா !?? அல்லது யார் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்று COMMENT பண்ணுங்க.. !

மீதமுள்ள சில போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவை மாற்றம் செய்யுமா சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதை பார்க்கலாம்.. !