யுஸ்வேந்திர சஹால் தான் சரியாக பவுலிங் செய்வதில்லை ; அதனால் இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

ஆசிய கோப்பை 2022 போட்டிகள் கடந்த மாதம் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

indian Team 2

எப்பொழுதும் பெரிய போட்டிகளில் சொதப்பலாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி எப்பொழுது சீரியஸ் தொடரில் வெற்றிகளை கைப்பற்றுவது சுலபமாக வைத்துள்ளனர். ஆனால் இந்த முறை ஆசிய டி-20 லீக் போட்டிகளில் அட்டகாசமாக விளையாடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.

இதுவரை பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கைப்பற்றி சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். என்னதான் இந்திய அணியில் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பவுலிங் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்பது தான் உண்மை.

இந்த முறை அர்ஷதீப் சிங், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர்களுக்கு ஆசிய கோப்பையில் தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்துகிறாரா என்று கேட்டால் அது சந்தேகம் தான். அதிலும் சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் எதிர்பார்த்த அளவிற்கு பவுலிங் செய்யவில்லை என்பது தான் உண்மை.

இதுவரை பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகளுக்கு எதிரான பேட்டிகளில் பவுலிங் செய்த யுஸ்வேந்திர சஹால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறார் யுஸ்வேந்திர சஹால். இந்திய கிரிக்கெட் அணி ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி பிஷானி போன்ற சிறந்த சுழல் பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது ஏன் ? யுஸ்வேந்திர சஹாலுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருகிறது இந்திய ?

இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கூறுகையில் ; “இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக தான் இருந்தது. ஆனால் இந்த முறை ஆவேஷ் கான் மற்றும் அர்சத்தீப் சிங் போன்ற வீரர்களின் பவுலிங் கவலைப்படும் நிலையில் தான் இருக்கிறது. அதனால் நிச்சியமாக புவனேஸ்வர் குமாருக்கு சுமையாக தான் இருக்கும். அதைவிட முக்கியமான விஷயம், சுழல் பந்து வீச்சாளர் சஹால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது பவுலிங் இல்லை.”

“அவரால் (சஹால்) சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை என்றால் ரவி பிஷானி-க்கு வாய்ப்பு கொடுக்கலாம். நிச்சியமாக அவரால் சூழ்நிலையை புரிந்து கொண்டு விரைவாக அதற்கு ஏற்ப அவரால் பவுலிங் செய்ய முடியும். இந்திய அணிக்கு தேவையான வீரராக இருப்பார் ரவி பிஷானி என்று கூறியுள்ளார் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here