இந்திய அணியின் வருங்கால கேப்டன் இவர் தான் அதில் மாற்றமே இல்லை ; சுனில் கவாஸ்கர் ; முழு விவரம் ;

இந்திய ; 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி20 போட்டிகள். இதுவரை 13 சீசன் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 14வது சீசன் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் 2021 போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதனால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

நேற்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி டி 20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்தார். வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் உலகக்கோப்பை டி20 2021 லீக் போட்டிகள் நடந்து முடிந்த பிறகு இந்த முடிவுக்கு வருவதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

அதனால் அவருக்கு அடுத்த அப்படியாக ரோஹித் சர்மா தான் டி20 போட்டிகளின் கேப்டனாக இருப்பர் என்று எதிர்பார்க்க படுகிறது. இதனை பல கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் அதனை பாராட்டி வருகின்றனர். அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் விராட்கோலி க்கு பிறகு பிசிசிஐ நன்கு கவனித்து தான் கேப்டன் யாகிர் என்பதை அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கே.எல்.ராகுல் தான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர். அதுமட்டுமின்றி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கே.எல் ராகுல் அதிக ரன்களை அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் டி20 போட்டிகளில் சிறப்பாக தான் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் . அதனால் கே.எல்.ராகுல் கேப்டனாக இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர்.

ஆனால் சுனில் கவாஸ்கர் சொன்னது போல, பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தி வந்தாலும் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பது தான் உண்மை, அதுமட்டுமின்றி சர்வதேச போட்டிக்கு வரும்போது கே.எல்.ராகுலை விட ரோஹித் சர்மாவுக்கு தான் அதிக அனுபவம் மற்றும் அதிக வாய்ப்புள்ளது கேப்டனாக.

ஏனென்றால் ஐபிஎல் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு சிறப்பாக விளையாடி வருகிறது ,அதனை அருமையாக வழிநடத்தி வருகிறார் ரோஹித் சர்மா என்பது தான் உண்மை. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து முறை கோப்பை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி 2019 மற்றும் 2020 ஆம் கோப்பைகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமா இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.