HomeTrending Newsரோஹித்-க்கு பிறகு இவர் தான் இந்திய அணியின் கேப்டன் ; மாற்றமே இல்லை ; முன்னாள்...

ரோஹித்-க்கு பிறகு இவர் தான் இந்திய அணியின் கேப்டன் ; மாற்றமே இல்லை ; முன்னாள் வீரர் அருண் லால் பேட்டி ; யார் தெரியுமா ?

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இப்பொழுது தான் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடரில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகின்றனர்.

நாளை மறுநாள் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளன. அதில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணியை வீழ்த்தியது போலவே வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்லுமா ? இந்திய.

ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட்கோலி, முகமத் ஷமி, பும்ரா போன்ற வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. இந்திய அணி எப்படி விளையாட போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

இந்திய அணியின் கேப்டன்:

சமீபத்தில் தான் இந்திய அணியின் கேப்டன் பற்றிய சர்ச்சை மிகப்பெரிய அளவில் எழுந்தது. அதன்பிறகு ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். 35 வயதான ரோஹித் சர்மா இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக இருக்க முடியும் ?

இதனை பற்றி பேசிய இந்திய முன்னாள் வீரரான அருண் லால் ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்த இவர் தான் கேப்டனாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் கேப்டன் பற்றி பேசிய அவர் ; ” நிச்சியமாக ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு ரிஷாப் பண்ட் தான் கேப்டனாக இருக்க முடியும், அதில் சந்தேகம் வேண்டாம்.”

“எனக்கு தெரிந்து ரிஷாப் பண்ட் தான் எப்பொழுதும் எதை பற்றியும் பயம் இல்லாமல் போட்டியில் விளையாடுவார்.. அதுமட்டுமின்றி போட்டியின் அழுத்தத்தை புரிந்து கொண்டு செயல்பட கூடிய திறன் அவரிடம் உள்ளது. இப்படி பட்ட வீரரான ரிஷாப் பண்ட் நிச்சியமாக நல்ல தலைவனாக இருக்க முடியும்.”

“அதுமட்டுமின்றி ரிஷாப் பண்ட் போன்ற கேப்டன் இந்திய அணிக்கும் பட்சத்தில் அது இந்திய அணிக்கும் நல்லது தான் என்று கூறியுள்ளார் அருண் லால்.”

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை பற்றி பேசிய அருண் லால் ; ” இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெல்வதற்கு முன்பு போட்டியில் எப்படியாவது ட்ரா செய்ய வேண்டுமென்று தான் யோசிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது இது மாறியுள்ளது. அது விராட்கோலி-க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.”

“ஏனென்றால், விராட்கோலி தான் இந்திய வீரர்களின் யோசனையில் தோல்விக்கு பதிலாக எப்படி வெல்ல வேண்டும் என்று மாற்றியுள்ளார். இதேபோல ரிஷாப் பண்ட் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால் நிச்சியமாக இந்திய அணியின் நாயகனாக வரலாம் என்று கூறியுள்ளார் அருண் லால்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img