இனி ஒருநாள் போட்டிக்கு இவரைத்தான் கேப்டனாக்க போறோம்… கசிந்த பிசிசிஐ தகவல்!!! அப்போ விராட்கோலி நிலைமை???

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பும் மாற்றப்பட இருப்பதாக பிசிசிஐ தரப்பிலிருந்து ரகசிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்து வந்த நிலையில், இந்த வருட டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். டி20 போட்டிகளுக்கான நிரந்தர கேப்டன் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.

இந்த சூழலில் அடுத்து நடைபெறவிருக்கும் நியூசிலாந்து அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஆடவிருக்கிறது. இந்த தொடருக்கு தற்காலிகமாக ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இரு முன்னணி வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து தொடரில் மட்டுமல்லாது அடுத்தடுத்து டி20 தொடர்களுக்கும் குறிப்பாக, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கும் ரோகித் சர்மா கேப்டனாக  தொடர்ந்து நியமிக்கப்படலாம் என்கிற தகவல்களும் வெளிவருகின்றன.

இந்த நிலையில், பிச்சிஐ தரப்பு டெஸ்ட் மற்றும் லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன்களை நியமிக்கலாம் என்கிற முடிவினை ஆலோசித்து வருவதாக தெரிகிறது. ஆகையால் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் யார்? என்கிற சூழலில், ஒரு சில பிசிசிஐ அதிகாரிகள் ரோகித் சர்மாவின் பெயரை கசியவிட்டிருப்பதாக தெரிகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டி உலக கோப்பை தொடரை கருத்தில்கொண்டு பிசிசிஐ இந்த முடிவை எடுக்க முன்வரலாம் என்கிற மற்றொருபுற தகவல்களும் வருகின்றன. இதுகுறித்து நிரந்தரமான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட் மற்றும் இன்னும் சில பிசிசிஐ மேல்மட்ட அதிகாரிகள் தீவிர ஆலோசனைக்குப் பிறகு இப்படியான முடிவை எடுக்கலாம். அதற்கு முன்னதாக தனிப்பட்ட முறையில் விராட் கோலியுடன் நேர்காணல் நடைபெற்று இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இன்னும் முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆனால் ஒரு சில கசியும் தகவல்கள் வைத்துப் பார்க்கையில் லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கு ஒரு கேப்டனும் டெஸ்ட் போட்டிக்கு தனி கேப்டன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. மேலும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக தொடர்ந்து நீடிக்கலாம். அதேபோல் லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கான கேப்டன் குறித்த முடிவுகள் மட்டும் இன்னும் முழுமையாக எடுப்பதற்கு ஆலோசனைகள் நடைபெற்று வருவதால் விரைவில் அறிவிக்கப்படலாம்.

மேலும் சில அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் முடிவுற்ற பிறகு ஒரு சில நாட்களிலேயே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் காண கேப்டன் பொறுப்பு யாருக்கு கொடுக்கப்பட உள்ளது என்கிற தகவல்கள் வெளியிடப்படும். இதற்கான வாய்ப்பு அதிகபட்சமாக ரோகித் சர்மா வசமே செல்லலாம் என பேச்சுகள் அடிபடுகின்றன.