லக்னோ அணியில் இடம்பெற்றுள்ளார் முக்கியமான வீரர் இவர் தான் ; இப்பொழுது எங்கள் அணி முழுமையாக உள்ளது ; கம்பிர் ஓபன் டாக் ;

0

ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 79 வீரர்கள் கைப்பற்றபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்க் முறை மெகா ஏலம் நடைபெறுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது. லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஐபிஎல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக விளையாடிய கம்பிர், இரு முறை கொல்கத்தா அணி கோப்பை வெல்ல முக்கியமான காரணமாக இருந்துள்ளார். லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் செய்துள்ளனர். இருப்பினும் புதிய அணியான லக்னோ இந்த முறை எப்படி போட்டிகளில் விளையாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

நேற்று நடந்த ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி கைப்பற்றிய வீரர்களின் விவரம் இதோ ; தீபக் ஹூடா 5.75, அவேஷ் கான் 10, மனிஷ் பாண்டே 4.60 , ராஜ்பூட் 0.50, மார்க் வுட் 7.5 , ஜேசன் ஹோல்டர் 8.75 , டி-காக் 6.75, குர்னல் பாண்டிய 8.25 கோடி விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது. இதனை பற்றி பேசிய கவுதம் கம்பிர் ; முதலில் நாங்க டி – காக் மற்றும் ஜேசன் ஹோல்டரை கைப்பற்றினோம். பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான் எங்கள் அணியில் எடுத்துள்ளோம்.

டி-காக் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஜேசன் ஆல் ரவுண்டராக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் தான் இந்த முறை முக்கியமான வீரராக உள்ளார். ஏனென்றால் அவருடைய வேகத்திற்கு பவுலிங் செய்யும் வீரர்கள் இந்திய அணியில் குறைவு தான் என்று கூறியுள்ளார் கம்பிர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here