HomeTrending Newsஇந்திய அணியின் மார்க்கீ ப்ளேயர் இவர் தான் ; எப்படி வேண்டுமானாலும் விளையாட கூடிய திறன்...

இந்திய அணியின் மார்க்கீ ப்ளேயர் இவர் தான் ; எப்படி வேண்டுமானாலும் விளையாட கூடிய திறன் உள்ளது ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.. அதில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரான் ஆகிய இருவரும் அணியை வழிநடத்த உள்ளனர்.

அதற்கான இந்திய அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ரோஹித் சர்மா, விராட்கோலி, பும்ரா, முகமத் ஷமி போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. சமீபத்தில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய காரணத்தால் சில முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது பிசிசிஐ.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் விவரம் :

ஷிகர் தவான், அர்ஷதீப் சிங், அவேஷ் கான், முகமத் சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சஹால், ஷர்டுல் தாகூர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், சுமன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான்.

இந்திய அணியில் கம்பேக் கொடுத்த ஆல் – ரவுண்டர் :

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக திகழும் முன்னணி வீரராக இருந்த ஹர்டிக் பாண்டியா இரு ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருந்து ஹர்டிக் பாண்டியாவால் சரியாக பவுலிங் செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

வெறும் பேட்டிங் வைத்து மட்டுமே கடந்த ஆண்டு உலகக்கோப்பை 2021 போட்டிகளில் விளையாட பிசிசிஐ, 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஹர்டிக் பாண்டிய பெயர் இடம்பெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக விளையாடாமல் இருந்தார் ஹர்டிக். பின்பு சில மாதங்கள் என்னை எந்த விதமான போட்டிகளில் விளையாடமால் இருந்தார் ஹர்டிக்.

பின்னர், ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக வழிநடத்தி சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார் ஹர்டிக். அதுமட்டுமின்றி ஐபிஎல் 2022 போட்டிக்கான கோப்பையை குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2022யில் சிறப்பாக விளையாடிய ஹர்டிக் பாண்டிய, இந்திய அணியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் ; “முன்பு போல ஹர்டிக் பாண்டிய இப்பொழுது இல்லை. ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்டிக் பாண்டியவை தேர்வு செய்தது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் அதற்கு முன்பு அவரது பிட்னெஸ் ஒரு கேள்வியாக இருந்தது, அதுமட்டுமின்றி பேட்டிங் சரியாக இல்லாமல் இருந்தது.”

‘ஹர்டிக் பாண்டியவை சும்மா அணியில் எடுத்துக்கொள்ள மட்டுமில்லை, அவருக்கு முடிந்தவரை அனைத்து விதமான ஆதரவுகளையும் கொடுத்துள்ளனர். ஐபிஎல் 2022 போட்டிக்கு பிறகு இப்பொழுது இருக்கும் ஹர்டிக் பாண்டியவிடம் அதிகமான பொறுப்பு, அலட்சியம் ஆகியவற்றை அதிகரித்துள்ளது.”

“இந்திய கிரிக்கெட் அணியுடன் முன்னேற வேண்டுமென்று நினைத்தால் நிச்சியமாக பிரமாண்டமான நோக்கம் தான். அதுமட்டுமின்றி, பேட்டிங்-ல் அவ்வப்போது மூன்றாவதாகவும் விளையாடி வருகிறார். அதேபோல தான் ரிஷாப் பண்ட் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார்.”

“ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய ஆகிய இருவரின் அபாரமான ஆட்டத்தை கண்டு மகிழ்ந்துள்ளேன். அந்த நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு பார்ட்னெர்ஷிப் உருவாக்கி வந்தனர். இறுதிவரை ரிஷாப் பண்ட் நின்று விளையாடியது மிகவும் சிறந்த விஷயம் , அவருக்கு வாழ்த்துக்கள்.”

“டி-20 போட்டியாக இருந்தாலும் சரி, ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி நிச்சியமாக ரிஷாப் பண்ட் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கூட விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அணியில் இல்லை, ஆனால் இப்பொழுது திறமையான வீரர்கள் பலர் உள்ளனர் என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img