ரோஹித் இல்லை ;அடுத்த இந்திய அணியின் கேப்டன் இவர்தான் ; உறுதியாக சொல்கிறார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். இறுதி போட்டியில் இந்திய மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளும் மொத உள்ளன. இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக தற்காலிகமாக போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ. அதனால் கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இல்லாமல் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து எதிரான 5 டெஸ்ட் சீரியஸ் போட்டிகளை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட சில வீரர்களை தேர்வு செய்துள்ளது. அதில் ஹார்டிக் பாண்டிய இல்லாதது சர்ச்சையை ஏற்பட்டது., ஏன் ஆல் – ரவுண்டர் இல்லை என்று?

இந்திய அணியின் விவரம் இதோ ;

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, புஜாரா, மயங்க அகர்வால், பும்ரா, அக்சர் பட்டேல், சுமன் கில், விஹாரி, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவி சந்திரா அஸ்வின், இஷாந்த் சர்மா, முகம்மது சிராஜ், முகம்மது ஷாமி, தாகூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், சஹா, அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணிக்கு அடுத்த கேப்டன் இவர் தான் அடித்து சொல்லும் முன்னாள் இந்திய அணியின் வீரரான சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ஒருவேளை உண்மை தானோ ?

சமீபத்தில் சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில்; ஐபிஎல், டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியில் விளையாட முடியாமல் போய்விட்டது. அதனால் வேறு வழியில்லாமல் ரிஷாப் பண்ட் டெல்லி கேப்டனாக பதவி பெற்றார்.

கேப்டன் ஆன டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சிறப்பான முறையில் வழிநடத்தில் புள்ளிபட்டியலில் வைத்துள்ளார் ரிஷாப் பண்ட். அதனால் இவர் தான் நிச்சியமாக இந்திய அணியின் வருங்கால கேப்டன் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

ஐபிஎல் 2021யில் 8 போட்டிகளில் விளையாடிய டெல்லி சாபிட்டல்ஸ் அணி அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் அதிக அனுபவம் பெற்று டெல்லி அணியை சிறப்பான முறையில் வழிநடத்தியுள்ளார் ரிஷாப் பண்ட்.

இவர் தான் இந்தியாவின் வருங்கால கேப்டன் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர். ஐபிஎல் 2021யில் 8 போட்டிகளில் விளையாடிய ரிஷாப் பண்ட் 213 ரன்களை அடித்துள்ளார்.

அதில் அதிகபட்சமாக 58 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் விளாசியுள்ளார். அதில் 25 பவுண்டரி 4 சிக்சர் அதில் அடங்கும். வருகின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சீரியஸ் போட்டிகளில் விளையாட போகிறார் ரிஷாப் பண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.