தோனிக்கு பிறகு இவர் தான் கேப்டன் , அட நம்ம ஆளு…!!! சிறப்பாக சிஎஸ்கே அணியை வழிநடத்துவாரா ???

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை துண்டியுள்ளது ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம். ஐபிஎல் 2021 போட்டிகள் நடந்து முடிந்து இரு மாதங்களே ஆகியுள்ளது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி, இதுவரை நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகள் புதிதாக ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்றுள்ளனர். அதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடத்தை போவதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகள் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

அதுவும் நேற்று முன்தினம் தான் அனைத்து அணிகளும் அவரவர் அணிகள் தக்கவைத்து வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது பிசிசிஐ….!!

அதுமட்டுமின்றி, சிஎஸ்கே அணியின் அஸ்திவாரமே தோனி ஆனால் பெரும்பாலும் ஐபிஎல் போட்டிக்கான பேச்சு வந்தால் தோனியின் கேப்டன்ஷிப் மற்றும் தோனி எப்பொழுது ஓய்வு பெற போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரையில் தான் சிஎஸ்கே அணி தோனியை தக்கவைத்துள்ளது.

ஆனால் இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது ? தோனிக்கு பிறகு யார் சிஎஸ்கே அணியின் கேப்டன் என்று. இந்த முறை தோனிக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை தான் முதல் வீரராக சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது. அதுமட்டுமின்றி நீட்ட நாட்களாக ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரராக கருதப்படுகிறார்.

அதனால் ரவீந்திர ஜடேஜா தான் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது. தோனிக்கு அடுத்ததாக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருந்தால் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக இருக்குமா ?? ஜடேஜாவால் சிஎஸ்கே அணியை சரியாக வழிநடத்த முடியுமா ? உங்கள் கருத்தை மறக்காமல் Comments பண்ணுங்க…!!!