இந்த பையன் தான் அடுத்த சேவாக் … பா…. என்னமா பேட்டிங் பண்றாரு ! இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான் ; ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் ;

0

உலக கிரிக்கெட் போட்டிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது இந்தியா கிரிக்கெட் அணி. இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார் ராகுல் டிராவிட். அதனால் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் தான் அடுத்த சேவாக் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க். மேலும் பேசிய அவர் ; சேவாக் பற்றி சொல்லவேண்டியதே இல்லை, அவர் மிகச்சிறந்த அதிரடியான வீரர். பல போட்டிகளில் இந்திய அணியை முன்னேற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் எனக்கு பிடித்த வீரராக சேவாக் உள்ளார். அதேபோல இப்பொழுது சேவாக் இடத்தில் விளையாடிய வருகிறார் பிருத்வி ஷாவ், இந்திய கிரிக்கெட் அணி நிச்சியமாக அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

அதற்கு அவரை அதிக அளவில் எதையும் எதிர்பார்க்க முடியாது. அவர் இளம் வீரர், அதனால் சில நேரங்கள் ஆகும். இந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். அவர் முதல் முதலாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதனை பார்த்த பிறகு முடிவு செய்தான் அவர் நல்ல வீரராக வலம் வர போகிறார் என்று கூறியுள்ளார் மைக்கேல் கிளார்க்.

22வயதான பிருத்வி ஷாவ் கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா அணியில் அறிமுகம் ஆனார். அதிலும் முதல் போட்டி 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். அதேபோல ஐபிஎல் 20 லீக் போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

இளம் வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுமா ?

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பலர் நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் ரன்களை அடித்து தொம்சம் செய்த ஒரே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் தான். ஆமாம்..! அப்படி இருந்தும் அவருக்கு இன்னும் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இடம்கிடைக்கவில்லை.

இப்படி இருக்கும் நிலையில் எப்படி பிருதிவி ஷாவ்-க்கு வாய்ப்பு வழங்கப்படும் ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here