தோனி இல்லை; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர்ஸ்டார் இவர் தான் ; முன்னாள் சிஎஸ்கே வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்..! யார் அது தெரியுமா?

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் டி-20 2021 போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் தீடிரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐபிஎல் 2021 போட்டிகளை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டது.

ஏன் ஐபிஎல் 2021 போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தினார் ?

மே மாத தொடக்கத்தில் சில கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் பிசிசிஐ அறிவுரை படி அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சில வீரர்களுக்கு தோற்று உறுதியானது.

அதனையடுத்து அனைத்து அணிகளில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சென்னை சூப்பர் கின்ஸ்க் அணியை சேர்ந்த 3 பேருக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த 2 பேருக்கும், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் உடனடியாக ஐபிஎல் 2021, மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் தற்காலிமாக போட்டிகளை நிறுத்தி வைத்தனர். அதுமட்டுமின்றி மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் -ரவுண்டர் பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார், முன்னாள் நியூஸிலாந்து அணி மற்றும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ்.

சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் முக்கியமான வீரர் என்றால் அது ரவீந்திர ஜடேஜா தான். நான் ஒரு வெளிநாட்டு வீரராக இருந்து சொல்கிறேன். ஜடேஜா ஒரு மிகப்பெரிய வீரர், இவரை போல யாரும் இருக்க முடியாது. அவருடைய பீல்டிங் மற்றும் சிறப்பான பேட்டிங் திறன் பார்க்கும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

அவர் ரன் -அவுட் செய்யும் முறையும் அற்புதமாக தான் இருக்கும். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவரை இறுதி நேரத்தில் பேட்டிங் செய்வதற்கு பதிலாக இன்னும் முன்னாடியே பேட்டிங் செய்தால் அருமையான ஆட்டத்தை விளையாட முடியும் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2021 போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா 28 பந்தில் 62 ரன்களை விளாசியுள்ளார். அதிலும் இறுதி ஒவேரில் 37 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.