Advertisement
HomeTrending Newsஇந்தியாவின் நம்பர் 1 பவுலர் இவர் தான் ; உலகக்கோப்பை போட்டியிலும் இவருக்கு வாய்ப்பு இருக்கும்...

இந்தியாவின் நம்பர் 1 பவுலர் இவர் தான் ; உலகக்கோப்பை போட்டியிலும் இவருக்கு வாய்ப்பு இருக்கும் ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகள் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.

ஆமாம், அதுவும் இந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டும் சீரியஸ் தொடரில் அவரது முழு திறனையும் வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் உலகக்கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்த்து கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐசிசி டி-20 உலககோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி தான் கோப்பையை வென்றது.

அதில் இருந்து கடந்த 6 ஆண்டுகளாக ஐசிசி டி-20 கோப்பையை வெல்ல முடியாமல் திணறிக்கொண்டு வருகிறது இந்திய. அதிலும் கடந்த ஆண்டு தான் மிகவும் மோசமான ஆண்டாக இருந்தது. ஏனென்றால், ஐசிசி டி-20 2021ல் இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறினார்கள்.

அதனால் இந்த முறை நிச்சியமாக இந்திய அணி கோப்பையை வெல்ல அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி ஐபிஎல் 2022 போட்டியில் சிறப்பாக விளையாடிய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது இந்திய.

23 வயதான அர்ஷதீப் சிங் கடந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்தார். அதனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர், இந்திய அணிக்கு தேவையான ஒன்று. அதனால் இவர் உலகக்கோப்பை 2022 போட்டியின் ப்ளேயிங் 11ல் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதனை பற்றிப்பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் சில முக்கியமான தகவலை கூறியுள்ளார்.

அதில் ” எதிர்காலத்தில் இவர் (அர்ஷதீப் சிங்) தான் நம்பர் 1 வீரராக இருக்க கூடிய திறமை உள்ளது. உண்மையிலும் இவரது பவுலிங் அட்டகாசமாக உள்ளது. நிச்சியமாக இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியிலும் இடம்பெறுவார் என்று உறுதியாக கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.” அர்ஷதீப் சிங் டெத் ஓவரில் பவுலிங் செய்து சிறப்பான economy வைத்துள்ளார். இருப்பினும் புவனேஸ்வர் குமார், பும்ராவை தவிர்த்து நிச்சியமாக தீபக் சஹார், அவேஷ் கான், ஷமி போன்ற வீரர்களுக்கிடையே போட்டி இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை…!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular