ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான இயன் சாப்பெல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை விட இவர் கேப்டனாக இருக்க அதிகம் தகுதி இவருக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.
டிம் பைனே போட்டிகளுக்கு பிறகு இவர் தான் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருக்க முடியும் என்று அவரது கருத்தை கூறியுள்ளார் இயன் சாப்பெல். இப்பொழுது ஆஸ்திரேலியா அணி முன்னேறி போக வேண்டும். அதாவது, ஒருவேளை நீங்கள் மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்வது உபயோகமில்லை.
அப்படி செய்தால் ஆஸ்திரேலியா அணி சில ஆண்டுகள் பின்னோக்கி செல்வது போல தான் தெரிகிறது. ஆனால் இப்பொழுது நாம் முன்னேறி செல்ல வேண்டும். வருகின்ற ஆண்டுகளில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் தான் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருக்க முடியும்.
கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான முறையில் பந்து வீசியுள்ளார். பேட் கம்மின்ஸ் பற்றி மக்கள் மேலும் கீழுமாக நினைத்தால், பேட் கம்மின்ஸ் தான் கேப்டனாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார் இயன் சாப்பெல்.
அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற பேட் கம்மின்ஸ், ஒரு ஆல் -ரவுண்டர் என்று நிரூபித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய பேட் கம்மின்ஸ் 50க்கு மேற்பட்ட ரன்களை விளாசியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தோற்று அதிகம் உள்ளது. அதனால் பல மாநிலங்களில் போதுமான அளவு ஆக்சிஜன் மட்டுமின்றி போதுமான அளவு பெட் இல்லாமல் கொரோனவால் பதிக்கப்பட்டவர்கள் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில். ஆஸ்திரேலியா அணியின் வீரர் பேட் கம்மின்ஸ் இந்திய மக்களுக்காக 50,000 $ நிதியுதவி கொடுத்துள்ளார்.