கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகம் ஆனார் ருதுராஜ் கெய்க்வாட், ஆனால் இவர் அறிமுகம் ஆன முதல் போட்டியில் ஒரு ரன்களை கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தார். ஆனால் தோனி அவருக்கான வாய்ப்பை கொடுத்து கொண்டே இருந்தார். அதனை சரியாக பயன்படுத்தி போன ஆண்டு இறுதி நேரத்தில் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தினார்.
ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் சிறப்பான தொடக்க வீரர் என்பதை நிரூபித்துவிட்டார்….!! ஏனென்றால் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 635 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒரு சதம் அடித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆகி இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளார் என்பது தான் உண்மை. ருதுராஜ் மற்றும் டுபலஸிஸ் ஆகிய இருவரின் பார்ட்னெர்ஷிப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2021யின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சமீபத்தில் வெளியான தகவலின் படி சையத் முஷ்டாக் அலி போட்டிகளில் மஹாராஷ்டிரா அணியை சிறப்பாக வழிநடத்தி கொண்டு செல்ல போகிறார் ருதுராஜ்.
அதாவது அவர் தான் மஹாராஷ்டிரா அணியின் கேப்டன் என்பதை அறிவித்துள்ளனர். இதனை கேட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் இப்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
அதிலும் இந்தியா அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெற வேண்டும் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர். ஆனால் வருகின்ற இந்திய அணியில் நிச்சியமாக ருதுராஜ் கெய்க்வாட் -க்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கிறது. ரோஹித் சர்மாவுக்கு பிறகு நிச்சியமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக இருக்க போகிறார் என்பதில் சந்தேகமில்லை.