எங்கள் அணியின் வெற்றிக்கு இவர்தான் காரணம் ; தோனியின் அதிரடியான பேட்டி….!
நேற்று நடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக 14 போட்டியில் சிஎஸ்கே அணியும் 9 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் வென்றுள்ளது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்த 106 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
பின்பு 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்த நிலையில் 107 ரன்களை எடுத்ததால் 6 விக்கெட் வித்தியசத்தில் வென்றது சிஎஸ்கே அணி.
இப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிபட்டியலில் 2 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வென்று, அதிக நெட் ரன் ரேட் +0.616 வைத்துள்ளதால் இரண்டாவது இடத்தில உள்ளது சிஎஸ்கே. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
எங்கள் அணியின் வெற்றிக்கு இவர்தான் காரணம் ; தோனியின் அதிரடியான பேட்டி….!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அளித்த பேட்டியில் வெற்றியை குறித்து பேசியுள்ளார்; அதில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அதிகபட்ச காரணமாக தீபக் சாகர் இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏனென்றால் 4 ஓவர் பந்து வீசிய தீபக் சாகர் வெறும் 13 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி முக்கியமான பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் விக்கெட்டை எடுத்துள்ளார். அதில் மயங்க அகர்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா மற்றும் நிக்கோலஸ் பூரான் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியை சுலபமாக வெல்லவதற்கான வாய்ப்பாக இருந்தது. இதை தான் நான் தீபக் சாகரிடம் எதிர்பார்த்த ஒன்று என்று கூறியுள்ளார் தோனி.