ஐபிஎல் போட்டிகளில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இதுவரை மற்ற அணிகளை விட அதிக போட்டிகளில் வென்ற அணியும் சிஎஸ்கே அணி தான். அதுமட்டுமின்றி இதுவரை நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் ஐபிஎல் 2021 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது சென்னை. பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் முன்னேறியது சென்னை.
பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையையும் வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022யில் மிகப்பெரிய ஏலம் நடத்த போவதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு அணிகள் புதிதாக இணைய போவதாக பிசிசிஐ கூறியது. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியும்.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வீரராக 16 கோடி ரூபாய் கொடுத்து ரவீந்திர ஜடேஜாவை தக்கவைத்தது சிஎஸ்கே நிர்வாகம். அதன்பின்னர் தான் கேப்டனான மகேந்திர சிங் தோனியை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே. அதுமட்டுமின்றி ருதுராஜ் மற்றும் மொயின் அலி ஆகிய நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே அணி.
நிச்சியமாக தோனி இன்னும் சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் அதன்பின்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது உறுதியான நிலையில், அடுத்த கேப்டன் யாராக இருக்கும் என்று பல் கேள்விகள் எழுந்துள்ளன. அப்படி பார்த்தால் தோனிக்கு பிறகு நிச்சியமாக ரவீந்திர ஜடேஜா தான் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, தோனிக்கு முன்பே ரவீந்திர ஜடேஜா மேல் அதிக நம்பிக்கை உள்ளது தான் உண்மை. அதுமட்டுமின்றி தோனி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜாவை பற்றி முன்பே கூறியுள்ளார். அதில் ரஜினி காந்த் நடிகருக்கு வயது ஆகிக்கொண்டே இருப்பதால் அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை அறிமுகம் செய்துள்ளார் என்று தோனி கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேஜா தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஜடேஜா கேப்டனாக இருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவாக இருக்குமா ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் கருத்துக்களை Comments பண்ணுங்க….!!!!