இவர் தான் இந்திய அணியில் இருக்கும் சிறந்த பவுலர் என்று விராட்கோலி கூறினார் ; அவருடைய பந்தை எதிர்கொள்வது கடினமாக இருக்கும் ; பாரத் அருண் பேட்டி ;

0

இந்திய கிரிக்கெட் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஆமாம்..! விராட்கோலி-க்கு பதிலாக இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாட உள்ளார் ரோஹித் சர்மா. அதுமட்டுமின்றி, தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இடம்பெற்றுள்ளார்.

வருகின்ற 6ஆம் தேதி முதல் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மூன்று ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது தான் உண்மை.

இந்திய அணியின் முக்கியமான பவுலராக வலம் வருகிறார் பும்ரா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பெற்றார். பின்னர் இருவருடைய அசத்தலான பந்து வீச்சால் இந்திய அணியின் முக்கியமான வீரராக மாறியுள்ளார் பும்ரா. அதுமட்டுமின்றி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் துணை கேப்டனாக விளையாடியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளரான பாரத் அருண் அளித்த பேட்டியில் ; விராட்கோலி என்னிடம் அடிக்கடி சொல்லுவார் இவர் தான் இந்திய அணியின் முக்கியமான வீரர் என்று. 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட எங்களுக்கு 12 நாட்கள் பயிற்சி செய்ய இருந்தன.

அதில் விராட்கோலியை கவர்ந்துள்ளார் பும்ரா. ஆமாம்..! விராட்கோலி என்னிடம் பேசிய போது நம்மிடம் இருக்கும் பவுலர்களில் பும்ரா தான் கடுமையான வீரராக இருக்கிறார். அப்பொழுது தான் உடனடியாக பும்ரா-வை முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தோம். அதில் இருந்து தான் அவருடைய கிரிக்கெட் வாழ்கை ஆரம்பித்தது.

நங்கள் கொல்கத்தாவில் இருக்கும்போது ரவி சாஸ்திரி என்னை தொடர்பு கொண்டு பும்ராவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி, அதற்கு முன்னாள் இந்திய அணியின் ஒருநாள் படிகளில் சிறப்பாக விளையாடி வந்துள்ளார் பும்ரா, அப்பொழுது அவர் என்னிடம் பேசும்போது என்னுடைய கனவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது தான் என்று பும்ரா சொன்னதாக பாரத் அருண் பேட்டியில் கூறியுள்ளார்.

இன்னும் இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான யார் என்பதை பற்றி பிசிசிஐ அறிவிக்க நிலையில், பும்ரா கேப்டனாக இருந்தால் சிறப்பாக தான் இருக்கும் என்று சிலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேப்டனாக விளையாடுவாரா பும்ரா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here