வருகின்ற ஜூன் 18ஆம் தேதி விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளன. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதுமட்டுமின்றி, உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிக்கு பிறகு இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராகவும் 5 டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்ள போகிறது. அதனால் சமீபத்தில், இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் ஹார்டிக் பாண்டிய இல்லை, அதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அதேபோல செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ஐபிஎல் 2021 மீண்டும் தோண்ட உள்ளது. அதுமட்டுமின்றி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் டி-20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் முதல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் அணியின் வீரரான முகம்மது அமீர், இந்திய அணியில் இவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம் தான் என்று கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஒரு கிரிக்கெட் யூடியூப்-யில் அளித்த பெட்டியில் அதனை கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் வீரரான ஸ்டீவ் ஸ்மித்துக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். அவருக்கு நன்கு தெரியும் , யார் எந்த மாதிரி பந்து வீசுவார்கள் என்று. அதேபோல இந்திய கிரிக்கெட் அணியிலும் ரோஹித் ஷர்மாவை விட இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கு பந்து வீசுவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் விராட் கோலி விளையாடிய அனைத்து விதமாக போட்டிகளிலும் (டி-20, டெஸ்ட் மற்றும் ஓருநாள்) சிறப்பாக விளையாடி வருகிறார் விராட் கோலி. அவருக்கு அனைத்து நுணுக்கங்களும் தெரிந்து வைத்துள்ளார். அதனால் விராட் கோலியை விட ரோஹித் சர்மா விக்கெட்டை சுலபமாக கைப்பற்ற முடியும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகம்மது அமீர் கூறியுள்ளார்.