இவர் ஒருவர் போதும் எந்தவிதமான தொடரிலும் இந்திய அணி வென்றுவிடும் ; இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ; ஷோயிப் அக்தர் பேட்டி ;

0

இந்திய கிரிக்கெட் அணி :

இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து பல விதமான போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். இதன் அடிப்படையில் தான் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி முடிவாகும். ஏனென்றால், இந்திய அணியில் பல வீரர்கள் உள்ளனர்.

அதில் 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஆமாம், இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ரிஷாப் பண்ட் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் ரிஷாப் பண்ட் தான்.

ஏனென்றால், மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அப்பொழுது சிறப்பாக சூழ்நிலையை புரிந்து விளையாடிய ரிஷாப் பண்ட் சதம் அடித்தார் (125*). அதுமட்டுமின்றி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார் ரிஷாப் பண்ட்.

ஒரு வீரர் சிறப்பாக விளையாடினாலும், மோசமான நிலையில் இருந்தாலும் அவரை பற்றிய கருத்து சொல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல தான் இந்திய வீரரான ரிஷாப் பண்ட் பற்றி பாக்கிஸ்தான் முன்னாள் வீரரான ஷோயிப் அக்தர் அவரது கருத்தை கூறியுள்ளார்.

அதில் “ரிஷாப் பண்ட் பொறுத்தவரை கட் ஷாட், ரிவர்ஸ் ஷாட் போன்ற அனைத்து விதமாகவும் அவரால் விளையாட முடியும். எப்பொழுது ரிஷாப் பண்ட் பயப்படுவே மாட்டார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளிலும் விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்துள்ளார்.”

“அவரிடம் பல திறமைகள் உள்ளன. அதனால் எதிர் அணியில் யார் இருந்தாலும் நிச்சயமாக அழுத்தம் தான் ஏற்படும். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சூழ்நிலையை புரிந்து சிறப்பாக விளையாடி ரன்களை எந்தவிதமான பயமும் இல்லாமல் அடித்தார். அவரால் எப்பொழுதும் நினைத்தாலும் அதிரடியாக விளையாடுவார்.”

எனக்கு தெரிந்து ரிஷாப் பண்ட் கிரிக்கெட் போட்டிகளில் சூப்பர்ஸ்டார் ஆவதற்கான நேரம் வந்துவிட்டது என்பது தான் உண்மை. அவரை நிறுத்த வேண்டுமென்றால், அது அவர் நினைத்தால் மட்டுமே முடியும் என்று பாராட்டி பேசியுள்ளார் ஷோயிப் அக்தர்.” ரிஷாப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டி-20 போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here