இந்திய கிரிக்கெட் கடந்த வாரம் வங்கதேசம் சென்றுள்ள நிலையில் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரிலும், இரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளனர். அதிலும் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தியுள்ளது பங்களாதேஷ் அணி.


சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் பங்களிப்பு என்பது மிகவும் மோசமான நிலையில் தான் இருக்கிறது. மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியால் ஒரு முறை கூட உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிச்சியமாக டி-20 உலகக்கோப்பையை வெல்லும் என்று பலர் ஆசையாக இருந்தனர். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதுமட்டுமின்றி, கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ரோஹித் ஷர்மாவின் பங்களிப்பும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் உண்மை. அதனால் டி-20 போட்டிக்கான கேப்டனாக ஹர்டிக் பாண்டியவை அறிவிக்க உள்ளது பிசிசிஐ.


இருந்தாலும் ரோஹித் சர்மாவால் இனிமேல் இந்திய அணியை சரியாக வழிநடத்த முடியாது. அதனால் இந்த வீரர் கேப்டனாக விளையாடினால் இந்திய அணி சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் வீரரான மனீந்தர் சிங்.
இதனை பற்றி மேலும் பேசிய அவர் (மனீந்தர் சிங்) கூறுகையில் : “ஹர்டிக் பாண்டிய இப்போவே கேப்டனாக அறிவிப்பது சரியாகபடவில்லை. ஆனால் நீங்க ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக பொறுப்பேற்று விளையாட கூடிய திறன் அவருக்கு உள்ளது. நான் கடந்த 4 ஆண்டுகளாவே ஸ்ரேயாஸ் ஐயர் தான் கேப்டனாக இருக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.”
“நிச்சியமாக ஸ்ரேயாஸ் ஐயரால் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும். ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடிய போது அவரது மூளையை சரியாக பயன்படுத்தி சிறப்பாக விளையாடுவார். எப்பொழுதும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாட ஆசைப்படுவார். ஒருவேளை பவுண்டரி கிடைக்கவில்லை என்றால் கூட நிச்சியமாக 1 ரன்கள் அல்லது 2 ரன்களை அடிக்க முயற்சி செய்வார் என்று கூறியுள்ளார் மனீந்தர் சிங்.”


கேப்டன் என்ற பொறுப்பில் இருக்கும் வீரர் பவுலிங் அல்லது பேட்டிங் போன்ற விஷயங்களில் ஒன்றில் ஆவது தெளிவாக இருக்க வேண்டும். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பேட்ஸ்மேன். அவர் இறுதியாக விளையாடிய 10 டி-20 போட்டிகளில் 0, 13, 1, 64, 24, 10, 0, 28, 0, 4 ரன்களை அடித்துள்ளார். அதே சமையத்தில் இறுதியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டியில் 24, 49,0, 80, 28, 113,50, 44, 63 ரன்களை அடித்திருக்கிறார். இதனை வைத்துக்கொண்டு ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக அறிவிப்பது சரியா ?
ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டும ? அல்லது ரோஹித் சர்மாவே தொடர வேண்டுமா? அல்லது யார் கேப்டனாக இருந்தால் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடும் ?