ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக இவர் தான் சரியாக இருப்பர் அதில் எந்த சந்தேகமும் இல்லை ; யார் அந்த வீரர் தெரியுமா…?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த கொண்டு இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் வருகின்ற ஜூன் 18ஆம் முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளன. இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒருவேளை இந்திய அணி வெற்றியை கைப்பற்றினால், முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பெற்ற பெருமை இருக்கும்.

சமீபத்தில் பிசிசிஐ இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் குல்தீப் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் அணியில் இல்லாதது ரசிகர்கள் இடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஆல் -ரவுண்டரான ஹார்டிக் பாண்டிய இல்லாமல் எப்படி ?

சமீபத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தாகூர் -ரின் பயிற்சியாளர் ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக இவர் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டை எடுத்து மட்டுமின்றி இந்திய அணியின் வெற்றிக்காக அரைசதம் அடித்துள்ளார்.

அவரது பயிச்சியாளரான தினேஷ் அளித்த பேட்டியில்; சமீபத்தில் ஹர்டிக் பந்தியாவுக்கு அடிபட்ட காரணத்தால் அவரால் பந்து வீச முடியவில்லை. அதனால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் இந்திய அணிக்கு ஏற்ற வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படுகின்றனர்.

அதனை நிச்சியமாக தாகூர் சரி செய்வார். நிச்சியமாக தாகூர் அந்த திறமை இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்திய அணியின் அடுத்த ஆல் -ரவுண்டர் ஆக வர அதிகம் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் தாகூர்-ரின் பயிற்சியாளர் தினேஷ் லட்.