இந்திய அணியில் பவுலர்களை விட இவர் மிகவும் ஆவேசமாக நடந்து கொள்ளவர் ; இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்..இவர் தான..!

உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்திய மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளும் இறுதி போட்டியில் மோத உள்ளன. அதிலும் இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒருவேளை இந்திய அணி வெற்றிபெற்றால், முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பெற்ற சாதனை இந்திய அணிக்கு கிடைக்கும்.

சமீபத்தில் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் அளித்த பேட்டியில் ; ஒரு இந்திய அணியின் வீரரை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதனை பற்றி பேசிய சுப்மன் கில்; இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, என்னிடம் எப்பொழுதும் அவரது அனுபத்தை பகிருவார்.

விராட் கோலி எப்பொழுதும், எங்களை அவரவர் போக்கில் பயம் இல்லாமல் போட்டிகளை விளையாட சொல்லுவார்.எப்பொழுதும் எங்களை ஊக்குவித்து கொண்டே இருப்பார். எப்பொழுதெல்லாம் எனக்கு மனம் கஷ்டமாக இருந்தாலும், நான் விராட்கோலியிடம் பேசுவேன்.

அதுமட்டுமின்றி, இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி எப்பொழுதும் அவரது ஆக்குரோஷத்தை வெளிப்படுத்துவார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷாமியின் பந்து வீச்சை விட விராட் கோலியின் உணர்ச்சிகள் மிகவும் ஆக்குரோஷமாக இருக்கும்.

விக்கெட் எடுக்கும் பவுலரை விட விராட் கோலி எப்பொழுதும் விக்கெட் எடுக்கும்போதெல்லாம் அவ்வளோ சந்தோஷத்தில் துள்ளி குதிப்பர். யாரவது விக்கெட் எடுத்தால் சில பவுலர்கள் அந்த அளவுக்கு சந்தோசத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்.

அதனை கேக்கும்போது, எனக்கு பதிலாக விராட் கோலி அதனை கொண்டாடிவிடுவார்..! என்று இந்திய அணியில் இளம் வீரரான சுப்மன் கில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, வருகின்ற ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சுப்மன் கில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.