டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் ஆ ? ஸ்ரேயாஸ் ஐயர் ஆ ? முடிவை அறிவித்தது டெல்லி அணி ;

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டி இந்தியாவில் அறிமுகம் ஆனது. பின்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காரணத்தால் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதுவும் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் டி-20.

ஏனென்றால் இது ஒரு 20 ஓவர் போட்டி, அதனால் போட்டிகள் எப்பொழுது விறுவிறுப்பாக தான் நடைபெறும். அனைத்து அணிகளும் அதிரடியாக தான் விளையாடும். இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2021 ; புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்,

நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி இந்த முறை அருமையாக விளையாடி வருகின்றனர். டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தான் இருந்தார். ஆனால் இந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஆக ரிஷாப் பண்ட் உள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் தோள்பட்டையில் பலமாக அடிபட்டுவிட்டது. அதனால் அவரால் போட்டிகளை தொடர்ந்து விளையாட முடியமால் போனது. அதுமட்டுமின்றி 6 மாதங்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள்.

அதனால் ஐபிஎல் 2021 ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்த நேரத்தில் அவரால் விளையாட முடியாமல் போனது. அதனால் அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் கேப்டன் என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்கள் கூறினார். ஆனால் இப்பொழுது ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் விளையாட தயாராக உள்ளார்.

அதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் மாற்றப்படுமா ? என்ற கேள்விகள் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்விகள் எழுப்பினார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரிஷாப் பண்ட் தான் கேப்டனாக மீதமுள்ள போட்டிகளில் இருப்பர் என்று கூறியுள்ளது டெல்லி உரிமையாளர்கள்.

இந்தமுறை ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி கோப்பையை வெல்லுமா ? இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.