HomeTrending Newsடி-20 போட்டியில் ஆதிக்கத்தை காட்ட போகும் இந்திய வீரர் இவர் மட்டும் தான் ; முன்னாள்...

டி-20 போட்டியில் ஆதிக்கத்தை காட்ட போகும் இந்திய வீரர் இவர் மட்டும் தான் ; முன்னாள் இங்கிலாந்து பவுலர் ட்ரெயின் பேட்டி ;

இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகள் இன்று இரவு முதல் தொடங்க உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன்பு தான் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் மோசமான பேட்டிங் காரணமாக ரன்களை அடிக்க தவறியது இந்திய.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் மற்றும் பரிஸ்டோவ் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடிய சதம் அடித்தனர். அது இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணமாக மாறியது தான் உண்மை. இறுதியில் 7 விக்கெட்டை வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து.

டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் ஆவது தொடரை கைப்பற்றுமா இந்திய கிரிக்கெட் அணி ? முதல் டி-20 போட்டியில் முன்னணி வீரர்களான விராட்கோலி மற்றும் சில முக்கியமான வீரர்களுக்கு முதல் டி-20 போட்டியில் மட்டும் ஓய்வு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு போட்டி நடைபெற்றால், அதில் சிறப்பாக விளையாடிய வீரரை பற்றியும், சரியாக வாய்ப்பை பயன்படுத்தாத வீரரை பற்றி விமர்சம் கூறுவது சாதாரணம் தான். அதேபோல தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ட்ரெயின் , இந்திய அணியின் வீரரை பற்றி சில முக்கியமான தகவலை கூறியுள்ளார்.

அதில் “ரிஷாப் பண்ட் சிறப்பாக விளையாடி வருகிறார். எனக்கு தெரிந்து நிச்சியமாக இன்னும் 7 ஆண்டுகள் அவரால் ரன்களை அடிக்காமல் இருக்க முடியாது, அவரது அதிரடியான ஆட்டம் இன்னும் தொடரும். நிச்சியமாக டி-20 போட்டிகளில் அவரது (ரிஷாப் பண்ட்) ஆதிக்கத்தை செலுத்துவார்.”

“அவரிடம் அதிக திறமை உள்ளது, அதனால் பவுண்டரிகளை அடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறியுள்ளார் ட்ரெயின். ரிஷாப் பண்ட் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 146 ரன்களை முதல் இன்னிங்ஸ்-ல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img