HomeTrending Newsஅடுத்த இந்திய அணியின் கேப்டன் இவர் தான் போல..! இதுதான் மாஸ் கம்பேக் ; ரசிகர்களுக்கு...

அடுத்த இந்திய அணியின் கேப்டன் இவர் தான் போல..! இதுதான் மாஸ் கம்பேக் ; ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிகள் இந்தியாவில் குறிப்பிட்ட மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமின்றி, இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது இறுதி போட்டிக்கு. இந்த முறை மும்பை மற்றும் சென்னை ஆகிய இரு அணிகளும் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத காரணத்தால் யார் கோப்பையை வெல்ல போகிறார்கள் ?

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி , தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய இரு அணிகளுடன் டி-20 சீரியஸ் போட்டிகளில் விளையாட உள்ளது. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதனை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்..!

ஹார்டிக் பாண்டிய கம்பேக்;

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஹார்டிக் பாண்டிய அணியில் இடம்பெற்றது பலருக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. ஏனென்றால் அதற்கு முன்பு பல போட்டிகளில் ஹார்டிக் பாண்டிய பவுலிங் செய்யவில்லை ..! பேட்டிங் செய்யவில்லை..! என்பது தான் உண்மை.

பின்னர், உலகக்கோப்பை போட்டியிலும் பெரிய அளவில் விளையாடவில்லை. அதன்பின்னர் நான் எப்பொழுது பவுலிங் சரியாக வீசுகின்றானோ..! அப்பொழுது என்னை அணியில் எடுங்கள் அதுவரை வேண்டாம் என்று ஹார்டிக் பாண்டியவே கூறினார்..! அதனால் வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.

அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொழுது ஐபிஎல் போட்டியில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக விளையாடி வருகிறார் ஹார்டிக் பாண்டிய. அதுமட்டுமின்றி, அணியை சிறப்பாக வழிநடத்திய ஹார்டிக் பாண்டிய, இதுவரை குஜராத் அணி 12 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், ப்ளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக குஜராத் திகழ்கிறது.

சவுத் ஆப்பிரிக்கா சீரியஸ் போட்டிகள் ;

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் விராட்கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற முன்ணனி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்திய அணியில் கேப்டனாக ஹார்டிக் பாண்டிய இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாபிரிக்கா அணிக்கு அடுத்து இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள போகிறது இந்திய. அதில் மற்ற வீரர்களான விராட்கோலி, பும்ரா, ரோஹித் சர்மா, ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்று கூறியுள்ளது பிசிசிஐ.

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க ஹார்டிக் பாண்டிய இந்திய அணியின் கேப்டனாக இடம்பெற்றால் சிறப்பாக இருக்குமா ?? குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்திய ஹார்டிக் பாண்டியாவால் இந்திய அணியை வழிநடத்த முடியுமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img