Advertisement
HomeTrending Newsசவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு...

சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது ; ஏனென்றால் இவர் விளையாட போவதில்லை ;

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தான் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

அவர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளனர். அதிலும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் முதல் டெஸ்ட் போட்டி செண்டோரின் மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கு இதுவரை விளையாடிய போட்டிகளில் அதிக முறை தென்னாபிரிக்கா அணி தான் வென்றுள்ளது. அதனால் இந்திய அணிக்கு நிச்சியமாக சவாலாக தான் இருக்க போகிறது என்பதை மாற்றமில்லை.

ஒரு போட்டி என்று வந்துவிட்டால் போதும், ஒரு வீரரை பற்றியோ அல்லது அந்த அணியை பற்றி சக வீரர்கள் அல்லது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை கூறுவது வழக்கம் தான். அதேபோல தான் கவாஸ்கர் இந்திய அணியின் வெற்றியை பற்றி பேசியுள்ளார்.

அதனை பற்றி அவர் கூறுகையில் ; தென்னாபிரிக்கா அணியில் டூப்ளஸிஸ் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் இந்திய அணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதுமட்டுமின்றி, பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான டி-காக் நிச்சியமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்.

ஏனென்றால் அவர் மனைவி கர்ப்பமாக உள்ளார். சரியாய் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது தான் குழந்தை பிறக்க போகிறதாக தெரிகிறது. இது அவர்களது முதல் குழந்தை என்பதால் நிச்சியமாக டி-காக் அவரது மனைவியுடன் தான் இருக்க ஆசைப்படுவார்.

என்னதான் டி-காக் இந்திய அணியின் பவுலிங்கை விரும்பினாலும், அவரால் விளையாட முடியமால் போகலாம். அதனால் தென்னாபிரிக்கா அணிக்கு பேட்டிங் லைன் சரியாக இருக்காது. அதனால் தொடரை கைப்பற்ற இந்திய அணிக்கு சுலபமாக தான் இருக்கும்.

கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது. அதனபின்னர் வெளிநாடுகளில் இந்திய அணிக்கு சில சுவாரஷியமான போட்டி அமைய தொடங்கியது. இப்பொழுது மீண்டும் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் வெற்றி பெற்றால் போதும், வானம் தான் இந்திய அணிக்கு எல்லை என்று கூறியுள்ளார் கவாஸ்கர்…!

முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26ஆம் தேதி செண்டோரினில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடைபெற உள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும் டீன் எல்கர் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோத உள்ளனர். அதில் இந்திய அணி வெற்றி பெறுமா ?? இல்லையா ??

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular