HomeTrending Newsபும்ராவிற்கு பதிலாக இவர் இந்திய அணியில் உடனடியாக சேர்க்க வேண்டும் ; லட்சுமிபதி பாலாஜி பேட்டி...

பும்ராவிற்கு பதிலாக இவர் இந்திய அணியில் உடனடியாக சேர்க்க வேண்டும் ; லட்சுமிபதி பாலாஜி பேட்டி ; AsiaCup 2022

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பைக்கான போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக எந்த பஞ்சமும் இருக்காது.

ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் அணிகள்:

இதில் மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். இதுவரை இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகள் உறுதியான நிலையில் ஆறாவது இடத்திற்கு (ஹாங் காங், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு) போன்ற நாடுகளுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் தீபக் சஹார், அக்சர் பட்டேல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் தீபக் சஹார் சமீப காலமாக இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். அதுமட்டுமின்றி, அவ்வப்போது சிறப்பாக பேட்டிங் செய்தும் வருகிறார்.

கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வெற்றிபெற வைத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் ஏற்பட்டது. அதில் இருந்து கடந்த 6 மாதங்களாக அவரால் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்று சிறப்பாக விளையாடியுள்ளார் தீபக் சஹார். 2 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் தீபக் சஹார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான லட்சுமிபதி பாலாஜி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் “தீபக் சஹார் முன்புபோல் இல்லாமல் ஆவது திறமை வளர்ந்து கொண்டே தான் போகிறது. எதிர்பாராத வகையில் காயம் காரணமாக அவரால் 6 மாதங்கள் விளையாட முடியாமல் போய்விட்டது. கிரிக்கெட் போட்டிக்காக எப்பொழுதும் கடினமாக பயிற்சி செய்ய கூடிய வீரர் இவர் தான்.”

“நான் அவரிடம் (தீபக் சஹார்) ஒன்று தான் சொல்ல ஆசைப்படுகிறேன், வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும், ஏனென்றால் மற்ற வீரர்கள் அவரவருக்கு ஏற்ப அணியில் இடத்தை தக்கவைத்துள்ளனர். எப்பொழுதும் அணியில் அவரை தேர்வு செய்வதை பற்றி எந்த யோசனையும் தேவை இல்லை. ஏனென்றால், அவரது பவுலிங் எப்பொழுது அவரது கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும்.”

“முதல் பந்தில் இருந்ததில் எப்பொழுதுமே கவனமாக தான் பவுலிங் செய்து வருகிறார் தீபக் சஹார். இனிவரும் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும், அவரது உடல் இப்பொழுது பிட் ஆக தான் இருக்கிறது. ஐக்கிய அரபில் நடக்க போகும் போட்டிகளில் தீபக் சஹார் நினைத்தால் புதிய பந்தை பயன்படுத்தி நிச்சியமாக டாப் ஆர்டரில் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்ற முடியும்.”

“அப்படி செய்யும்போது ஏன் அவருக்கு ஆசிய கோப்பை போட்டியில் வாய்ப்பு கொடுக்க கூடாது ? பும்ரா மற்றும் முகமத் ஷமி போன்ற முன்னணி பவுலர்கள் அணியில் இல்லாத நேரத்தில் நிச்சியமாக அந்த இடத்தில் தீபக் சஹார் பூர்த்தி செய்வார் என்று கூறியுள்ளார் லட்சுமிபதி பாலாஜி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img