HomeTrending Newsஇந்திய அணியின் கீ ப்ளேயார் இவர் தான் ; ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் சதம்...

இந்திய அணியின் கீ ப்ளேயார் இவர் தான் ; ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடிப்பார் ; ஸ்காட் ஸ்டைரிஸ் பேட்டி ;

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. இன்றைய போட்டி இரவு 8 மணியளவில் பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டியை போலவே தொடரை கைப்பற்றுமா இந்திய கிரிக்கெட் அணி ?

இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் சரியான வீரர்களை தேர்வு செய்து அவர்களை மட்டுமே அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட வைத்து வருகின்றனர். இதில் விராட்கோலி இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறுவாரா ? இல்லையா ? என்று பல குழப்பங்கள் எழுந்துள்ளது.

ஏனென்றால் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் வீரராக விராட்கோலி உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார் விராட்கோலி. 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தான் இறுதியாக சதம் அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் , டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. அதில் பெரிய அளவில் விளையாடவில்லை. அதனால் விராட்கோலிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் ஓய்வு கொடுத்துள்ளனர். சரியாக விளையாட நிலையில், விராட்கோலி-க்கு எப்படி ஓய்வு கொடுக்க முடியும் என்று பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் விராட்கோலி நிச்சியமாக இந்திய அணியில் விளையாட வேண்டுமென்று பிசிசிஐ தேர்வு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால், அதனை தொடர்ந்து ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது.

இதனை பற்றி பேசிய நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்ட்ரிஸ் விராட்கோலி பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” அவருக்கு தொடர்ந்து விராட்கோலிக்கு தோல்வியாக தான் உள்ளது. இப்பொழுது அவருக்கு முழுமையான ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதால் எந்த அளவிற்கு விராட்கோலிக்கு சிறப்பாக இருக்கும் என்று தெரியவில்லை.”

“ஒருவேளை ஜிம்பாபே போட்டியில் விராட்கோலி சதம் அடித்தால், அது நிச்சியமாக நம்பிக்கையாக இருக்கும். ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுமா என்று கேட்டால் அது சந்தேகம் தான். ஆனால் விராட்கோலி இன்னும் இந்திய கிரிக்கெட் அணியின் கீ ப்ளேயராக தான் நான் நினைக்கிறன்.”

நிச்சியமாக உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனென்றால் சும்மா ஏதாவது வீரர்களை தேர்வு செய்வதோ அல்லது திறமையான வீரர்களை மட்டும் தேர்வு செய்துவது இல்லை. பல முறைகளை வைத்துதான் தான் அணியை தேர்வு செய்ய முடியும். இதேபோல தான் நியூஸிலாந்து அணிக்கும், தேர்வர்களிடம் சில முக்கியமான தகவலை சொல்ல நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்காட் ஸ்டைரிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img