எங்க சிஎஸ்கே அணியில் இவரோட வெறித்தனமான ஆட்டத்தை, மீதமுள்ள போட்டிகளில் நிச்சியமாக பார்க்க தான் போறீங்க ; தீபக் சாகர் கருத்து…. தோனி ஆ ?? முழு விவரம் உள்ளே..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. சிறப்பான முறையில் ஆரம்பித்த ஐபிஎல் 2021 தீடிரென்று போட்டிகளை ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

ஏன் ஐபிஎல் 2021 ரத்து ? தெரியுமா ??

மே மாத தொடக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் உடனடியாக அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதியானது.

அதனால் பிசிசிஐ அச்சத்தால் அனைத்து அணிகளில் இருக்கும் வீரர்கள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருவருக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருவருக்கும், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

அதனால் உடனடியாக மீதமுள்ள போட்டிகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ. அதனால் கிரிக்கெட் றைஸ்க்ராஜில் மிகவும் சோகத்தில் மூழ்கினார்.

மீதமுள்ள போட்டிகள் எப்பொழுது நடைபெறும் நடைபெறும் ?

இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் 2021 போட்டிதான் இப்பொழுது தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். அதனால் மீதமுள்ள போட்டிகளை இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது. அதுவும் செப்டம்பர் 19ஆம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாகர்..! தோனியை பற்றி சில முக்கியமான கருத்தை கூறியுள்ளார்..!

ஐபிஎல் டி-20 போட்டிகளில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணிகளில் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை விட இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி. இதுவரை 7 போட்டிகளில் 5 போட்டிகள் வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதில் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் : தோனி இதுவரை 7 போட்டிகளில் 37 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த தீபக்:

ஒரு பேட்ஸ்மேன் நிச்சியமாக 15 அல்லது 20 ஆண்டுகளில் ஒரே மாதிரி விளையாட முடியாது. ஒருவர் நீண்ட காலமாக கிரிக்கெட் விலையிடாமல் தீடிரென்று போட்டிகளில் விளையாடுவது மிகவும் கடினம் தான். அதேபோல தான் தோனி, ஆனால் அவரது ஆட்டத்தை நிச்சியமாக மீதமுள்ள போட்டிகளில் தோனி வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார் தீபக் சாகர்.

இது என்னுடைய 4வது ஆண்டு நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் தோனி தலைமையிலும் விளையாடி வருகிறேன். தோனி எப்பொழுதும் என்னை நம்புவார். அவரது நம்பிக்கை மிகவும் முக்கியமான ஒன்று, ஏனென்றால் அவர் என்னை மட்டும் ஈர்க்கப்படவில்லை என்று கூறியுள்ளார் தீபக் சாகர்.