முதல் பந்தில் சதம் அடிப்பது போல, விளையாடுவார் ; ஆனால் ஆட்டம் இழந்துவிடுகிறார் ; இந்திய பேட்ஸ்மேனை பற்றி கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ;

0

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி இந்திய அணிக்கு மட்டுமின்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

உண்மையான கிரிக்கெட் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நிச்சியமாக, பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரு விஷயங்களை பற்றியும் யோசனை செய்ய வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் பற்றி பேச வேண்டுமென்றால் யாரும் அரைசதம் அடித்த பிறகு சதம் அடிக்க யாரும் முயற்சி செய்வதில்லை. அது தான் இங்கு இருக்கும் பிரச்சனையே.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் யாருமே அதிக ரன்களை அடிக்க முயற்சி செய்வதே இல்லை. ஒரு வீரர் 50 அல்லது 60 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தால், அதன்பின்னர் விளையாடும் வரும் வீரர்களுக்கு தான் தெரியும், எவ்வளவு அழுத்தம் ஏற்படும் என்று.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் ரிஷாப் பண்ட் தான், அவர் போட்டியில் களமிறங்கியுடன் சில நேரங்கள் எடுத்து கொண்டு ரன்களை அடிப்பார். அதுவும் இறுதியாக பேட்டிங் செய்து ரிஷாப் பண்ட் 20 அல்லது 30 ரன்களை அடித்து இந்திய அணியை வெற்றி பெற காரணமாக இருந்துள்ளார். ஆனால் இதே அவரை அணியில் முன்பே விளையாடினால். முதல் பந்தில் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்க முயன்று ஆட்டம் இழந்து விடுகிறார்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரிஷாப் பண்ட் இப்பொழுது சிறப்பான ஆட்டத்தை தான் விளையாடி வருகிறார் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 16, 85,0 ரன்களை அடித்துள்ளனர்.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும் டீன் எல்கர் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதின. அதில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது. பின்னர் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியும் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மூன்று ஒருநாள் போட்டி நடைபெற்றது.

அதில் 3 – 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி அனைத்து போட்டிகளிலும் வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் தினம்தோறும் அவரவர் கருத்துக்களை பதிவு செய்து கொண்டு வருகின்றனர்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here