ரோஹித், விராட்கோலி இல்லை ; இந்திய அணிக்கு இவர் ஒருத்தர் போதும் ; முன்னாள் இங்கிலாந்து அணி வீரர் பேட்டி ;

0

இங்கிலாந்து ஆனிக் எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணி வென்றதுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டியின் விவரம்:

இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் ககேப்டன் ரோஹித் சர்மா பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 259 ரன்களை அடித்தனர்.

இரண்டாவது ஒருநாள் போட்டியை போலவே விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணியால் ரன்களை அடிக்க முடியாமல் இருந்தது. ஆனால் ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது.

42 ஓவரில் 261 ரன்களை அடித்த இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றியதற்கு முக்கியமான காரணம் ரிஷாப் பண்ட் தான். ஏனென்றால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

அதே நிலைமை தான் மூன்றாவது போட்டியிலும், ஏனென்றால் முதல் 16 ஓவரில் நான்கு விக்கெட்டை இழந்த இந்திய அணி வெறும் 72 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. அதன்பின்னர் இந்திய அணி மீண்டு வருமா ? என்ற பலர் சந்தேகத்துடன் இருந்தனர். ஆனால் ரிஷாப் பண்ட் விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் தான் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது.

இப்பொழுது சமூகவலைத்தளங்களில் ரிஷாப் பண்ட் பற்றி அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹுசைன் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் “என்னால் இப்படி தான் விளையாட முடியும், சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட முடியாது என்று அனுபவம் வீரர்கள் கூறிவருகின்றனர்.”

“ஆனால் ரிஷாப் பண்ட் அப்படி இல்லை, எந்த விதமான சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அது எட்க்பாஸ்டன், பரிஸ்பானே அல்லது மான்செஸ்டர் எங்கு இருந்தாலும் இவரால் சிறப்பாக விளையாட முடியும். உண்மையிலும், இவரால் அனைத்து விதமான சூழ்நிலையிலும் விளையாட முடியும். நேற்று நடந்த போட்டியில் அவரது (ரிஷாப் பண்ட்) ஸ்டைலில் விளையாட்டை முடித்துள்ளார். இனிவரும் காலங்களில் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் இவர் தான் என்று கூறியுள்ளார் நாசர் ஹுசைன்.”

ரிஷாப் பண்ட் இரண்டாவது ஒருநாள் போட்டியில் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். ஆனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 125 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிக்கான தொடரில் ரிஷாப் பண்ட் தான் அதிக ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here