இனிமேல் இவரை நம்பிக்கொண்டு இருக்க முடியாது ; அதுவும் WTC இறுதி போட்டிக்கு இவர் தான் சரியான வீரர் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

மற்ற அணிகளுக்கு இடையேயான லீக் தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியால் உலகக்கோப்பை மற்றும் ஆசிய போன்ற கோப்பைகளில் விளையாடி வெல்ல முடிவதில்லை.

இருந்தாலும் இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற போகிறது இந்திய. அதனால் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிவரை முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணியிடம் தோல்வி பெற்று வெளியேறியது. அதனால் இந்த முறையாவது இந்திய அணி வெல்லுமா ?

இந்திய அணியின் வெளியேற போகும் தொடக்க வீரர் :

சமீபத்தில் இந்தியகிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக விளையாடி வரும் கே.எல்.ராகுலின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை. இருப்பினும் வாய்ப்பு என்பது தொடர்ந்து வழங்கப்பட்டு தான் வருகிறது.

ஆமாம், சமீபத்தில் நடந்த முடிந்த ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரு போட்டிகளிலும் மோசமான நிலையில் விக்கெட்டை இழந்தார் கே.எல்.ராகுல். இதேபோல கே.எல்.ராகுல் விளையாடினால் இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சரியான பங்களிப்பு இருக்காது.

அதனால் கே.எல்.ராகுலுக்கு பதிலாக மீதமுள்ள இரு போட்டிகளில் சுப்மன் கில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, சுப்மன் கில்-ன் பங்களிப்பு அதிரடியாகவும் சிறப்பாகவும் இடம்பெற்றால் நிச்சியமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில் தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்மன் கில் இறுதியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டியின் விவரம் : 52, 1, 44, 47, 17, 4, 20, 110, 7, 20 ரன்களை அடித்துள்ளார்.

கே.எல்.ராகுல் இறுதியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டியின் விவரம் : 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ரன்களை அடித்துள்ளார்.

அதனால் இந்திய அணியின் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் அல்லது சுப்மன் கில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? என்பதை மறக்காமல் கமெண்ட்ஸ் பண்னுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here