HomeTrending Newsஇந்திய அணியின் கில் கிறிஸ்ட் இவர் தான் ; பையன் பட்டைய கிளப்ப போறான் ;...

இந்திய அணியின் கில் கிறிஸ்ட் இவர் தான் ; பையன் பட்டைய கிளப்ப போறான் ; முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் நேற்று முதல் நடைபெற உள்ளது.

இன்று இரவு 10 மணியளவில் சவுத்அம்ப்டன் மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோத உள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கிய டெஸ்ட் போட்டி சமீபத்தில் தான் முடிந்தது.

அதில் இரு அணிகளும் 2 – 2 என்ற கணக்கில் சம நிலையில் இருந்த காரணத்தால் தொடர் ட்ரா ஆனது. அதனை தொடர்ந்து இன்று முதல் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

கிரிக்கெட் போட்டிகளில் பல வீரர்களுக்கு அவரவர் அணிக்காக பல சாதனைகளை செய்துள்ளனர். ஆமாம், அதில் விராட்கோலி, தோனி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கு இந்திய அணிக்கு பெருமை சேர்த்தது போல, ஆஸ்திரேலியா அணியை ஆடம் கில் கிறிஸ்ட் பல சாதனைகளை செய்துள்ளார்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் ; ” ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் இவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்குங்கள். அதிரடியாக விளையாடி ரன்களை அடிப்பார். எப்படி ஆஸ்திரேலியா அணியில் கில் கிறிஸ்ட் செய்தது போல என்று.”

மேலும் இதனை பற்றி பேசிய கவாஸ்கர் : ” நிச்சியமாகி அது தவறான முடிவாக இருக்காது. ஆஸ்திரேலியா அணியில் டெஸ்ட் போட்டிகளில் எப்பொழுது கில் கிறிஸ்ட் 6 அல்லது 7வது இடத்தில் பேட்டிங் செய்வது தான் வழக்கம். ஆனால் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி ரன்களை அடித்து விளாசியுள்ளார்.”

“அதேபோல இந்திய அணியின் வீரரான ரிஷாப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கினால் அதிரடியாக விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. அப்படி விளையாடும் போது ரிஷாப் பண்ட் -க்கு அதிகப்படியான ஓவர் விளையாட கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.”

“ரிஷாப் பண்ட் பினிஷர் என்று தான் அனைவரும் பேசிக்கொண்டு வருகிறோம். ஆனால் அவர் (ரிஷாப் பண்ட் ) இறுதியாக பேட்டிங் செய்வார், அதிரடியாக விளையாடி விக்கெட்டை இழந்துவிடுகிறார். அதனால் தொடக்கத்தில் களமிறக்கினால் நிச்சியமாக பொறுமையாக விளையாட முடியும்.”

“நிச்சியமாக இது இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்படும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர்.” இவர் சொல்வது போல இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் ரிஷாப் பண்ட் பார்ட்னெர்ஷிப் செய்தால் சிறப்பாக இருக்குமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img