இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. அதனால் இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணிக்கு முக்கியமான போட்டியில்லை.


இதனை தொடர்ந்து ஐந்து டி-20 போட்டிகள் விளையாட உள்ளனர். அதில் பும்ரா , ரோஹித் சர்மா, ஷமி போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெற உள்ளனர். இருப்பினும் அனைத்து அணிகளும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை டி-20 போட்டிகளில் விளையாடவதற்காக தயாராகி வருகின்றனர்.
இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது தான் உண்மை. ஆனால் இனிவரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை.


குறிப்பாக அடுத்து நடைபெற உள்ள ஐந்து டி-20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு இருக்காது. அதற்கு என்ன காரணம் ? ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இரு சதம் அடித்துள்ளார் ஐயர், பிறகு ஏன் வாய்ப்பு இல்லை. ஸ்ரேயாஸ் ஐயர் எப்பொழுதும் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்தை எதிர்கொள்வதில் அவருக்கு கடினமாக இருக்கும்.
அதனால் பெரும்பாலான போட்டிகளில் ஆட்டத்தை இழந்து வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். அதே நேரத்தில் சமீப காலமாக இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார் தீபக் ஹூடா. அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் தொடங்கி, சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகள் வரை சிறப்பாக விளையாடி வருகிறார் ஹூடா.
அதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக தீபக் ஹூடா தான் அணியில் இடம்பெற போவதாக ராகுல் டிராவிட் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை டி-20 போட்டிகளுக்கு இந்திய அணியை தயார் செய்து வருகின்றனர்.


அதிலும், இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதால் அங்கு அதிகமான வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுவது வழக்கம். அதனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அது சரியாக இருக்க வாய்ப்பு இல்லையென்றும், அவருக்கு இனிவரும் டி-20 போட்டிகளில் வாய்ப்புகள் கொடுக்கப்போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 54,63 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.