வாய்ப்பு கிடைக்காமல் நிற்கதியாய் நிற்கும் இந்திய அணியின் கேப்டன் ..! இதுக்கு மேல் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான் ; முன்னாள் இந்திய அணியின் தேர்வாளர் உறுதி…!!!

0

இப்பொழுதெல்லாம் தொடர்ந்து வாய்ப்பை இழந்து கொண்டே இருக்கிறார் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன், இனி வாய்ப்பு கிடைத்து என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் கருத்து கூறியுள்ளார்.

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. அதில் ரோஹித் சர்மா தான் கேப்டனாக தலைமை தாங்கி நடத்த வேண்டியது. ஆனால் காயம் காரணமாக இந்திய அணியில் வெளியேறியதால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தான் கேப்டனாக செய்ய பட போகிறார் என்று பிசிசிஐ கூறியுள்ளது..!!

சமீபத்தில் தான் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் அனுபவம் வாய்ந்த வீரர்களை விட இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதற்கு முக்கியமான காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் தொடர்ந்து சதம் அடித்து தொம்சம் செய்துள்ளனர். அதனால் தான் இந்திய அணியில் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் இளம் வீரர்கள் அறிமுகம் ஆகி வரும் நிலையில், அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. அது தான், நம்ம ஷிகர் தவான், இந்திய அணியின் முக்கியமான ஓப்பனிங் பேட்ஸ்மேன்னாக விளையாடி வந்துள்ளார். ஆனால் இப்பொழுதெல்லாம் அவரை பற்றி யாரும் பேசுவதே இல்லை.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் தேர்வாளரான கரீம் இதனை பற்றி கூறுகையில் ; இந்திய நாட்டுக்குள் நடக்கும் போட்டிகளை வைத்து இந்திய அணியில் தவானால் இடம்பெற முடியாது. இந்திய அணியில் அவருக்கு ஒரு இடம்கிடைத்தது, அதில் அவர் எப்படி விளையாடினார் என்பதை பொறுத்துதான் வாய்ப்புகள்.

ஆனால் தவான் ஒருவேளை இந்திய அணியில் இடம்பெற்றால் நிச்சியமாக நல்ல திறமையான பேட்ஸ்மேன்னாக இருப்பர் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி இந்திய அணியின் இளம் வீரரான ருதுராஜ் அருமையான ஆட்டத்தை விளையாடி வருகிறார். அதனால் இந்திய அணியின் மூன்றாவது இடத்தை பிடிப்பார் என்பதில் மாற்றுகருதில்லை…!!

கடந்த ஆண்டு 2021யில் இலங்கை அணிக்கு எதிரான சுற்று பயணத்தில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியது ஷிகர் தவான் தான். அதில் ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றியது இந்திய. மீண்டும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா ?? இப்பொழுது கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் போன்ற முன்னணி ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். தவான் நிலைமை அவ்வளவு தானா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here