சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கு இடையே டி-20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாடி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.


அதுமட்டுமின்றி இன்னும் சில நாட்களில் ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்திய அணி மிகவும் கவனமாக உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலையில் வெளியேறியது.
அதனால் இந்த ஆண்டு எப்படியாவது போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்ற வேண்டுமென்று அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளது இந்திய. சமீபத்தில் தான் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.
இந்திய அணியின் விவரம் :


ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான் போன்ற 15 வீரர்களின் பெயரை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
இதில் இந்திய அணியின் முன்னணி பவுலரான பும்ரா அணியில் இடம்பெறாதது, இந்திய அணிக்கு பின்னடைவு தான். ஏனென்றால் பும்ராவின் பவுலிங் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் தேவையான ஒன்று. உலகத்தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் பும்ரா இருந்துள்ளார். அப்படி இருக்கும்நிலையில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவரால் ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள முடியாது என்று உறுதியாக கூறியுள்ளனர்.


ஆசிய கோப்பையை காட்டிலும் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடக்கும் உலகக்கோப்பை போட்டி தான் மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் பும்ரா இடம்பெற வாய்ப்பு குறைவாக இருப்பது போல தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவின் காயத்திற்கு நிச்சியமாக இரு மாதங்கள் ஓய்வு தேவைப்படுகின்றனர்.
அதனால் இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறுவது சிரமம் தான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இருக்கும்நிலையில் யார் பும்ராவிற்கு பதிலாக அணியில் இடம்பெற போகிறார் என்ற குழப்பமும் அதிகரித்துள்ளது.