இரு தினங்களுக்கு முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 லீக் போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்தது. அந்த போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது.


ஆனால் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்து கொண்டு இருந்த காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 164 ரன்களை அடித்தனர். அதில் பிராண்டன் கிங் 20, மாயேர்ஸ் 73, நிக்கோலஸ் பூரான் 22, பவல் 23, ஹெட்மயேர் 20 ரன்களை அடித்தனர். பின்பு 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி. தொடக்க வீரரான ரோஹித் சர்மா சில ஓவரில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட்டாகி மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
பின்னர் சூரியகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதிலும் சூர்யகுமாரின் அதிரடியான ஆட்டம் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம். 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 165 ரன்களை அடித்தனர்.
அதில் சூரியகுமார் யாதவ் 76, ரோஹித் சர்மா 11, ஸ்ரேயாஸ் ஐயர் 24, ரிஷாப் பண்ட் 33*, ஹர்டிக் பாண்டிய 4, தீபக் ஹூடா 10* ரன்களையும் அடித்துள்ளனர். அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது இந்திய. என்னதான் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பவுலிங்கில் மட்டும் இந்திய அணி சொதப்பி வருகிறது தான் உண்மை.


1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்த இந்திய கிரிக்கெட் அணி இப்பொழுது 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் கடந்த சில போட்டிகளில் தீபக் ஹூடா, ரோஹித் சர்மா, ரிஷாப் பண்ட், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் மாற்றி மாற்றி தொடக்க வீரராக களமிறங்கி வருகின்றனர்.
ஆனால் இனிவரும் போட்டிகளில் மட்டுமின்றி, உலகக்கோப்பை டி-20 2022 போட்டியிலும் ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் தான் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி வந்த சூரியகுமார் யாதவ் தீடிரென்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடினார்.
முதல் இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் விளையாடவில்லை என்றாலும் மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இருப்பினும் நம்பியுடன் விளையாடிய சூரியகுமார் யாதவ் 76 ரன்களை விளாசினார். அதனால் இந்திய அணி வெற்றிபெற காரணமாக மாறியது.


அதுமட்டுமின்றி சூரியகுமார் யாதவ் எப்போது எந்த இடத்தில் அடிப்பார் என்று யாருக்குமே தெரியாது. அந்த அளவிற்கு சுற்றி சுற்றி அதிரடியாக விளையாடி வருகிறார். இதற்கிடையில், 9.5 ஓவர் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஜோசப் வீசிய பந்தை எதிர்கொண்டார் சூரியகுமார் யாதவ். அப்பொழுது அந்த பந்தை சாய்ந்தபடி அடித்த ஷாட் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.
How good was that shot from @surya_14kumar? Let us know in the comments.
Watch all the action from the India tour of West Indies LIVE, only on #FanCode 👉 https://t.co/RCdQk12YsM@BCCI @windiescricket #WIvIND #INDvsWIonFanCode #INDvsWI pic.twitter.com/ym1JkZjb1r
— FanCode (@FanCode) August 2, 2022