இதோட எனக்கு இந்திய கிரிக்கெட் அணியே வேண்டாம் ; நான் வெளிநாட்டு அணிக்காக விளையாட போகிறேன் ; தொடக்க வீரர் உறுதி

0

இந்திய கிரிக்கெட் அணி :

மற்ற அணிகளை காட்டிலும் இந்தியாவில் திறமையான பல வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட அதிகமான ஆசையில் இருக்கின்றனர். முதலில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் தான் ரஞ்சி கோப்பை போன்ற போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதில் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் தேர்வாக வாய்ப்புகள் இருக்கும்.

ஐபிஎல் தொடரில் மட்டும் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு உறுதி என்பது தான் உண்மை. ஆமாம், சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற அதிகப்படியான வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியது தான்.

அதுமட்டுமின்றி, திறமையான இளம் வீரர்கள் பலருக்கு அவ்வப்போது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாட முடியும். அதனால் பல வீரர்களுக்கு இப்பொழுது வாய்ப்பு கிடைக்காமல் வெறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

சேவாக்-க்கு கொடுத்த ஆதரவு எனக்கு கிடைத்திருந்தால் நான் சிறப்பாக விளையாடிருப்பேன் :

இந்திய மற்றும் தமிழக வீரராக முரளி விஜய் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்துள்ளார். இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 3982 ரன்களையும், 17 ஒருநாள் போட்டியில் விளையாடி 339 ரன்களையும் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகளிலும் விளையாடி இருக்கிறார்.

எனக்கு தெரிந்து நான் பிசிசிஐ-யிடம் இருந்து விடைபெறுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி பேசிய இந்திய அணியின் தொடக்க வீரரான முரளி விஜய் கூறுகையில் : “எனக்கு தெரிந்து இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு எல்லாம் முடிந்துவிட்டது. அதனால் நான் வெளிநாடுகளில் வாய்ப்பை கைப்பற்ற போகிறேன். இன்னும் போட்டியான விளையாட்டை விளையாட ஆசைப்படுகிறேன். 30 வயது வந்தால் ஏதோ 80 வயது முதியவர் ரோட்டில் நடந்து செல்வது போல தான் பார்க்கிறார்கள்.”

“இதனை பற்றி பேசி சர்ச்சையை கிளப்ப விரும்பவில்லை. நான் இன்னும் சிறப்பாக தான் பேட்டிங் செய்து வருகிறேன். இங்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான். அதனால் நான் வெளிநாடுகளில் வாய்ப்பை தேடி போக போகிறேன். ஒருவேளை எனக்கு மட்டும் சேவாக்-கு கிடைத்த ஆதரவு கிடைத்திருந்தால் நிச்சியமாக பல விஷயங்கள் மாறியிருக்கும் என்று கூறியுள்ளார் முரளி விஜய்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here